ஒல்லிக்கு வந்த சிக்கல் உதவிக்கு வந்த டிவி
அண்மையில் ஒல்லிப்பிச்சான் நடிகரின் லேட்டஸ்ட் படத்தை வாங்க முன் வந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. கூடவே இவர் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் டி.வி புகழ் நடிகரின் படத்தையும் வாங்கிக் கொள்வதாக பேச்சு. ஒல்லிப்பிச்சான் படத்திற்கு ஏழரை சி யும், டி.வி புகழ் நடிகர் படத்திற்கு பத்து சி யும் என்று நிர்ணயித்தார்கள். அதிர்ச்சியாகவில்லை ஒல்லி. ஏனென்றால் இன்றைய மார்க்கெட்டில் கில்லி வியாபார நடிகர் என்றால் அவர் டி.வி புகழ்தான் என்பதை அவரும் அறிவார்.
ஆனாலும், ஈகோ இடம் கொடுக்காதே? சார்… எப்படியிருந்தாலும் எனக்கு பதினேழரை சி தான் தரப்போறீங்க. என் படத்திற்கு பத்தும், அவர் படத்திற்கு ஏழரையுமா மாத்தி போட்டு கொடுங்களேன் என்று கேட்க, ஆடிப் போனார்களாம் தொலைக்காட்சி நிறுவனத்தினர். ‘எங்களுக்கு தனி தனி ஆடிட்டிங் இருக்கு சார். அந்தந்த படத்திற்கான பிரேக் ஈவன் காட்டியாகணும். வேணும்னா ஒண்ணு செய்யலாம். தனித்தனியா அமௌண்ட் போடாமல் ரெண்டு படத்திற்கும் சேர்த்து பதினேழரைன்னு போட்டு தர்றோம்’ என்று கூற, அதற்கப்புறம்தான் கைமாறியதாம் படம்.
ஆற்றை வெட்டலாம் மனுஷன். அதுல நீரை நிரப்பணுமே இறைவன்?