ஐயோ பாவம்… வாயை திறக்காத விமல்
சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சப்பை’ படம் தாறுமாறான ஹிட். படத்தை வெளியிட்ட லிங்குசாமிக்கு சுமார் ஏழரை கோடி லாபமாம். படத்தை கைமாற்றிய முதல் பிரதி தயாரிப்பாளரான சற்குணத்திற்கு சுமார் மூன்றரை கோடி லாபமாம். இப்படி ஆளாளுக்கு தங்கத்தை உமி போல ஊதிக் கொண்டிருக்க, ஒரிஜனல் உமி கூட கிடைக்காமல் உத்தரத்தை முறைத்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் ஹீரோ விமல். ஏன்?
‘ரிலீஸ் நேரத்தில் உங்க சம்பளத்தை செட்டில் பண்றேன்’ என்றாராம் சற்குணம். தன்னை ‘களவாணி’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் சரி கொடுக்கட்டும் என்று விட்டுவிட்டார் விமல். ஆனால் பணம் வந்து சேரவில்லை. அதற்கப்புறம் ஓடி மூன்றரை கோடி லாபம் பார்த்தாரே, அப்பவாவது வந்துவிடும் என்று நினைத்தாராம். ம்ஹும்… அப்பவும் வரவில்லை. இத்தனைக்கும் அவருக்கு தரப்பட்டது அவர் மற்ற படங்களுக்கு வாங்கும் சம்பளத்தில் பாதிதானாம். அதற்காக ஒரு கூப்பாடும் போடவில்லை விமல்.
அந்த விஷயத்தில் நாம மஞ்சுப்பைதான் போலிருக்கு என்று அமைதியாகிவிட்டார்.