பிள்ளையார் சுழிக்கு பதிலாக மண்டை ஓடு? பில்லி சூனிய ஆவிகள் பிடியில் கோடம்பாக்கம்!

‘காஞ்சனா’வில் லாரன்ஸ் ஆரம்பித்து வைத்த சூடு, இன்னும் ஆறியபாடில்லை. அதற்கப்புறம் ‘யாமிருக்க பயமே’ அடித்த ஹிட்டில் ஆடிப்போன அத்தனை பேய்களும் பில்லி சூனிய மந்திரவாதிகளிடமிருந்து விடுபட்டு, சினிமா டைரக்டர்களிடம் தஞ்சமடைந்து விட்டன! திரைக்கதை வசனம் எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு துவங்குவதுதான் ஒவ்வொரு இயக்குனர்களின் வழக்கம். இப்போதெல்லாம் அதற்கு பதிலாக மண்டை ஓடு படம் போட்டுதான் எழுதவே துவங்குகிறார்கள் ஆவியுலகத்தின் அற்புத இயக்குனர்கள்.

அந்த வரிசையில் இப்போது இன்னொரு படம். இப்படத்தின் பெயர் மூச்! ஆவி கதையிலும் இது வேறு டைப்! ஒரு நிஜமான தாய்க்கும், பேய்க்கும் நடக்கிற பாச போராட்டம்தானாம் கதை. இரண்டு பிள்ளைகளுடன் ஒரு வீட்டில் வாழும் அம்மா ஒருத்தி, அங்கிருக்கும் பேயிடமிருந்து தன் பிள்ளைகளை காக்க போராடுகிறாள். அந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாக நினைத்து அன்பு காட்டுகிறதாம் அந்த பேய்.

ஏகப்பட்ட கிராபிக்ஸ் சமாச்சாரங்களுடனும், திடுக்கிட வைக்கும் திரைக்கதையுடனும் இப்படத்தை இயக்கியிருப்பவர் வினுபாரதி. இவர் பாரதிராஜாவிடம் பணியாற்றியவர். இந்த கதையை படமாக்க கிளம்பியபோதே, பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜையும் நடிப்பதற்கு அழைத்து வந்துவிட்டார். நிறைய பேய் கதைகள் வர்றது நிஜம்தான். ஆனால் எங்க படம் நிச்சயம் வேறொரு ஸ்டைலில் இருக்கும் என்றார் வினு.

காதல் படங்களை இயக்குகிற பாரதிராஜா, ஹீரோ, ஹீரோயின்களுக்கு நடுவில் வெள்ளையுடை தேவதைகளை நடனமாட விடுவார். இந்த படத்தில் ஆவி எப்படி வருகிறது? வெள்ளையுடை தேவதைகளை காண்பிக்கவில்லை இவர். மாறாக கருப்பு உருவத்தில் சற்றே கலவர தோற்றத்தோடுதான் காட்டியிருக்கிறாராம். வேடிக்கை என்னவென்றால் நேரில் பார்க்க லட்டு மாதிரியிருக்கும் மிஷா கோஷல் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.

அழகியை ஆவியாக்கிய பாவம் உங்களை சும்மா விடாது வினுபாரதி!

Read previous post:
நெடுமாறன், வைகோவை சந்திக்க லைக்கா சுபாஷ்கரண் முடிவு! அதற்கப்புறம்தான் கத்தி பாடல்கள்?

கத்தி தனக்கு கூர் தீட்டிக் கொண்டது போக, இப்போது கத்தியையே போட்டுத் தள்ளுவதற்காக கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது சுற்று சூழல்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும்...

Close