நயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்! சுலபமாக முறியடித்த ஜோடி!
கோடம்பாக்கத்திலிருக்கும் எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஸ்பெஷலாக நாலு நாலு தண்ணி லாரிகளை முன்னேற்பாடாக வைத்துக் கொள்வது உசிதம். ஏனென்றால் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கும், டைரக்டர்களுக்கும் வந்திருக்கிற வயிற்றெரிச்சலால், மேற்படி பங்க்குகள் பற்றிக் கொண்டால் கூட ஆச்சர்யமில்லை. எல்லாம் நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதலால் வந்த கேடு.
ஊரே பற்றி எறிந்தாலும், தான் பாட்டுக்கு பிடில் வாசித்த நீரோ மன்னனின் அடுத்த அவதாரமாக மாறி, இந்த காதல் வானில் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத பஞ்சாயத்து. அதற்குள் ஷுட்டிங் முடிந்துவிட்டால், எங்கே சந்திப்பது? எப்படி காதல் வளர்ப்பது? என்பதால் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பை ஜவ்வாக இழுத்து வருகிறாராம் அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ்சிவன். தெரியாம கோர்த்துவிட்டுட்டமே என்கிற பெரும் கடுப்பில் இருக்கிற அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், போன வாரம் இன்னும் இன்னும் கடுப்பானார். ஏன்?
ஷுட்டிங் இன்னும் முடியல. ஐந்து நாள் இருக்கு என்றாராம் விக்னேஷ் சிவன். யோவ்… நீ லவ் பண்ணுறதுக்கு நானா கிடைச்சேன்? முதல்ல ஐம்பது நாள்ல இந்த படத்தை முடிச்சுர்றதா நீதான் சொன்னே? அப்புறம் 78 நாள் படம் பிடிச்சுருக்கே. அதுவும் போதாம இப்ப வந்து இன்னும் ஐந்து நாள் கொடுன்னு கேட்கிற… நான் இனிமேல் பத்து பைசா கூட செலவு பண்ண மாட்டேன். படத்தை முடிச்சு கொடுக்கறது உன் பொறுப்பு என்று எரிந்து விழ, விஷயத்தை நயன்தாரா காதுக்கு கொண்டு சென்றாராம் விக்னேஷ் சிவன்.
“இந்த பூலோக மானுடர்கள் இப்படிதான். நீ கவலைப்படாதே என் பிராண நாதா…” என்று ஆறுதலளித்த நயன்தாரா, “கடைசி ஐந்து நாட்கள் ஷுட்டிங் முடிக்க ஆகும் செலவை நானே தர்றேன்” என்றாராம். சொன்னபடியே அவர் பணத்தில்தான் ஷுட்டிங்கும் முடிந்திருக்கிறது.
தயாரிப்பாளர்னா தனுஷ் மாதிரியிருக்கணும். காதலின்னா நயன்தாரா மாதிரியிருக்கணும்! படம் எப்படியிருக்கோ…? அது எதுக்கு நமக்கு?
நயன்தாராவுக்கும் இப்ப இவர விட்டா வேற வலி இல்ல, பாவம் பையன்தான் தெரியாம மாட்டிகிட்டான்.. அதுக்காக தனுஷ் என்னடா பண்ணுவாரு… விஜய் சேதுபதி என்னடா பண்ணுவாரு…
இது எத்தன நாளைக்கோ..