தொடர்பு எல்லைக்கு வெளியில்…? விக்ரம்!?

ஐ படத்தின் மூலம் சீனா வரைக்கும் தன் புகழ் பரவப்போகிற சந்தோஷமோ, என்னவோ? உள்ளுர் தொடர்புகளை ஒரேயடியாக கட் பண்ணிவிட்டாராம் விக்ரம். முன்பெல்லாம் அறிமுக ஹீரோக்களை நேரில் அழைத்து பாராட்டுவது. அவர்களோடு ஓய்வு நேரத்தில் டின்னர், விளையாட்டு என பொழுதுபோக்குவது என்று ‘ஜெல்லாக’ இருந்த விக்ரம் இப்போதெல்லாம் தன்னை கல்லாக்கிக் கொண்டதாக கவலைப்படுகிறது கோடம்பாக்கம்.

சிறிது ஓய்வு கிடைத்தால் கூட மும்பைக்கு பறந்துவிடுகிறாராம். அங்கிருக்கும் ‘கான்’ ஹீரோக்களிடம் நட்பு பாராட்டுவதுதான் அவரது தலையாய கடமையாக இருக்கிறதாம். முன்பெல்லாம் அவரை சட்டென்று தொடர்பு கொண்டுவிட முடியும். இப்போது அவரது சிலந்தி வலை தோழர்களையெல்லாம் கூட, கட்டிய நாக்காலேயே அறுத்துவிட்டதால் அவர்கள் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே என்கிறார்கள் இங்கே.

கடல்ல பெருங்காயத்தை போட்டுட்டு, கைய மட்டும் சாம்பார்ல நனைச்ச கதையா, எல்லாமே ஏறுக்கு மாறாதான் நடக்கும் போல…

Read previous post:
இது ஒரு இன்னிசை மழை… 17 பாடல்களுடன் ஜேம்ஸ் வசந்தன்

‘கண்கள் இரண்டால்...’ பாடல் மூலம் தமிழக மக்களின் கண்களையெல்லாம் தன் பக்கம் திருப்பியவர் ஜேம்ஸ் வசந்தன். கங்கை அமரனுக்கு பிறகு வளவள பேச்சும், கலகல இசையுமாக கவர்ந்தவர்...

Close