மேலும் மேலும் சூடு வைக்க வேண்டுமா பார்த்திபன்?

வார்த்தை ‘குத்தர்’ பார்த்திபனுக்கு கடந்த ஒரு வார காலமாகவே இடைவிடாத ராகு காலம்! ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அவரது சந்தோஷத்தை ‘கொல்லிங்‘ மிஸ்டேக் ஆகிவிட்டபடியால் விளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த நேரத்திலும் அவர் மேற்படி செயலை நக்கல் அடித்திருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் ஷாக். வேறொன்றுமில்லை, இயக்குனர் மணிவண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட எடிட்டர் பற்றி தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட பிரஸ் ரிலீசில் குறிப்பிட்டிருந்த பார்த்திபன், மணிவண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட எடிட்டர் சுதர்சனை ‘முறையாக’ அறிமுகம் செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டதால் வந்தது வினை.

அப்படியென்றால் மணிவண்ணன் அவரை முறையாக அறிமுகப்படுத்தவில்லையா? என்று மணிவண்ணன் கடைசியாக இயக்கிய அமைதிப்படை 2 படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்ல, இந்த செயலுக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் பார்த்திபன், மேற்படி விஷயத்தை நான் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிற தொணியில் ஒரு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்தான் அவ்வளவு நக்கல். (அந்த அறிக்கை கீழே)

பார்த்திபனின் நகைச்சுவைக்கு தமிழ்நாடே அடிமை. அதுவும் அவரும் வடிவேலும் சேர்ந்து அடித்த கூத்துக்கு, மொத்த தமிழுலகமே அடிக்ட்! ஆனால் சீரியசான நேரங்களில் கூட இப்படி பதிலளித்து பிரச்சனைக்கு மேலும் மேலும் சூடு வைக்க வேண்டுமா பார்த்திபன்?

அதுபோக இன்னொரு அறிக்கையும் வந்திருக்கிறது அவரிடமிருந்து. உங்கள் படத்தில் விஜய்க்கு பதிலாக சூர்யாவை நடிக்க வைங்களேன் என்று இவர் ஷங்கரிடம் சொன்னதாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் யாரோ ஒரு புண்ணியவான். அதற்கும் சேர்த்து பதிலளித்திருக்கிறார் பார்த்திபன். (அதுவும் கீழே)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிப்புக்கு முழுக்கு! இஸ்லாமியாராக மத மாற்றம்! அழகி மோனிகா திடீர் முடிவு

கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா...

Close