நடிப்புக்கு முழுக்கு! இஸ்லாமியாராக மத மாற்றம்! அழகி மோனிகா திடீர் முடிவு

கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா. ஆனால் வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போனாலும், ஏன்? எதுக்காக பார்க்கணும்? முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்? என்று நெருங்கி கேட்ட சிலரிடம் மட்டும், ‘நாலு வருஷமா பொறுத்துட்டேன். இன்னும் நாலு நாள் பொறுக்க மாட்டேனா? மெதுவாவே பார்த்துக்குறேன். எல்லா வேலையும் முடிச்சுட்டு வாங்க’ என்று கூறிக் கொண்டிருந்தார். எப்படியோ… அந்த சந்திப்பு இன்று நிகழ்ந்துவிட்டது.

சந்திப்புதான் லேட்டே தவிர, செய்தி சுட சுட!

யெஸ்… மோனிகா இஸ்லாமியராகிவிட்டார். மோனிகாவும்… என்று கொஞ்சம் அழுத்தம் சேர்த்திருந்தால் சரியாக இருக்குமோ? யுவன்சங்கர் ராஜா, ஜெய்யை அடுத்து தமிழ்சினிமாவில் போல்டாக ஒரு முடிவெடுத்திருப்பவர் மோனிகா. இந்து கிறிஸ்து கலப்பின பசுவான மோனிகா, இப்போது இஸ்லாத்தை நாடியிருப்பது வெறும் ஆன்மீக பற்றுதானே தவிர, காதல் கீதல்னு எதுவும் இல்லையாம். அதையும் தன் வாயாலேயே சொல்லி பெரிய முணுமுணுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

அப்படியே அவர் சொன்ன இன்னொரு தகவல் மோனிகாவின் ரசிகர்களுக்கு பெருத்த வருத்தத்தை தரக்கூடும். இனிமேல் அவர் நடிக்கப் போவதில்லையாம். 2010 லேயே நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிட்டேன். ஆனால் நான் ஒப்புக் கொண்ட படங்கள் எல்லாம் முடியட்டும் என்று காத்திருந்தேன். இப்போதுதான் எல்லா படத்தையும் முடித்தேன். இனி நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. அதனால் இதுநாள் வரை என்னை பற்றி எழுதிய உங்களுக்கு இந்த செய்தியை சொல்லணும்னு வரச் சொன்னேன் என்றார்.

இந்த அறிவிப்பை சொல்வதற்கு வரும்போதே அவர் முழு இஸ்லாமிய பெண்ணாக வந்ததுதான் சிறப்பு.

1 Comment
  1. indian Kumar says

    அம்மா நீயே கலவை அங்கே எதையும் கலந்து விடாதே இதுவே நீ உன் பூர்வீகமான இந்து மக்களுக்கு செய்ய போகும் புண்ணியமாய் இருகட்டும்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நம்பியார் ஆகிறார் சமந்தா?

படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் நம்பியார் வேறு. பக்தர்! அது மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் ரொம்ப சுத்தர்! வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் சரி, உள்ளூர் படப்பிடிப்பு என்றாலும்...

Close