நம்பியார் ஆகிறார் சமந்தா?
படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் நம்பியார் வேறு. பக்தர்! அது மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் ரொம்ப சுத்தர்!
வெளியூர் படப்பிடிப்பு என்றாலும் சரி, உள்ளூர் படப்பிடிப்பு என்றாலும் சரி. சொந்த சமையல்தான் அவருக்கு. இதன் காரணமாகவே ஆரோக்கியமாக இருந்தார் அவர். சரி போகட்டும்… இப்போது எதற்கு அவர் பேச்சு? சமந்தாவும் நம்பியாராகிக் கொண்டிருக்கிறாரே, அதனால்தான்.
சமந்தாவும் சரும நோயும் பிரிக்கவே முடியாத ட்வின்ஸ் ஆகிவிட்டார்கள். அதிக வெப்ப விளக்குகளை அவர் சருமம் தாங்குவதில்லை. சரி, அவுட்டோரில் எப்படி? அதிக சூரிய வெளிச்சத்தையும் அது தாங்குவதில்லை. எப்படியோ, போராடி விரதமிருந்து டாக்டருக்கு பெருமளவு பணத்தை அழுது, எல்லார் போலவும் நார்மல் நிலைக்கு வந்துவிட்டார். இருந்தாலும் சரும விஷயத்தில் அஜாக்ரதையா இருக்கலாகாதும்மா என்று கூறிவிட்டாராம் மருத்துவர். வீட்டு சாப்பாடு தவிர வேறு எதை வாயில் வைத்தாலும் அது தன் ஆக்ரோஷயத்தை தோலில் காட்டிவிடும் என்று எச்சரித்துவிட்டாராம்.
இப்போதெல்லாம் உள்ளுர் படப்பிடிப்போ, வெளியூர் படப்பிடிப்போ? தன்னுடன் ஒரு சமையல்காரரையும் அழைத்து சென்றுவிடுகிறார் சமந்தா. இவர் எதை கேட்டாலும் அதை சுட சுட செய்து தர வேண்டியது அவர் பொறுப்பு. ஆனால் இப்படி சமையலுக்கு ஆகும் செலவும், பிரிப்ரேஷன் பிக் பாஸ்சான அந்த சமையல்காரர் சம்பளத்தையும் தயாரிப்பாளரே தர வேண்டும் என்கிறாராம் சமந்தா. அப்படி அவர் சொல்லும் கணக்கே நாளொன்றுக்கு பல்லாயிரக் கணக்கில் செலவாகிறதாம்.
தோலுக்கு வந்தது மேலோட போச்சு என்று சமந்தா நினைக்கிறார். தோலுக்கு வந்தது தாளோட போவுதே என்று தயாரிப்பாளர் நினைக்கிறார். எப்படியோ? படப்பிடிப்பு தடை படாம நடந்தா சரிதான்!