விமானத்தில் உருண்டு புரண்டு சண்டை பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்
ஒரு பிளாஷ்பேக்! ஐந்தாண்டுகள் இருக்கும்…. அது ஒரு சினிமா இயக்குனரின் திருமணம். அண்ணாநகரில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். மாப்பிள்ளை ஒரு இயக்குனர் என்பதால், ஏராளமான இயக்குனர்களும், ஒன்றிரண்டு நடிகர்களும் கூட வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு சிலரோடு வெளியில் ஒரு மர நிழலில் நின்று பேசிக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். அந்த நேரம் பார்த்து ஒரு சிறுவன், அதிகம் போனால் ப்ளஸ் டூ மாணவனாக இருக்கலாம். அவரையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெல்ல தயக்கத்தோடு அவர் அருகில் சென்று ஒரு காகிதத்தை நீட்டி ஆட்டோகிராஃப் கேட்க, தனது சுவாரஸ்யமான பேச்சுக்கு நடுவே மூக்கை நுழைத்துவிட்டானே என்ற கடுப்பில், விட்டார் ஒரு அறை…. திக்குமுக்காடி போனான் சிறுவன்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு அவரை திரும்பியே பார்க்காமல் ஓடிப் போனான். அதுதான் பிரகாஷ்ராஜ்! சினிமாகாரர்கள் பலருக்கும் ரசிகர்களின் தொந்தரவு இருக்கும். இல்லையென்றால் அந்த நடிகர் செத்த பாம்பு என்றுதான் அர்த்தம். பிரகாஷ்ராஜின் இதுபோன்ற அடாவடி செயல்கள் உச்சத்திற்கு போக போக, அவரது நிலைமை அதல பாதாளத்திற்கு போய் கொண்டிருப்பதை இன்டஸ்ட்ரி அறியும்.
ஒரு உதவி இயக்குனரை தாறு மாறாக பேசியதால், தெலுங்கு படவுலகம் அவருக்கு ரெட் கார்டு போட்டதை யாவரும் அறிவார்கள். தற்போதுதான் அந்த பிடி தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பிரகாஷ்ராஜ், உள்ளேயே ஒரு சக பயணியுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டாராம். அதற்கப்புறம் விமான ஊழியர்கள் ஓடிவந்து இருவரையும் சமானப்படுத்தியிருக்கிறார்கள். இந்த சண்டைக்கு காரணம், பக்கத்து சீட்டில் ஒரு பிரபல நடிகர் இருக்கிறாரே என்று அந்த பயணி போட்டோ எடுத்திருக்கிறார். அதில் துவங்கிய தள்ளுமுள்ளு பேச்சு, போலீஸ் கம்ளைண்ட் வரைக்கும் போயிருக்கிறது.
நடிகர் நடிகைகள் என்றால் மேலே விழுந்து முத்தம் கொடுக்க துடிக்கும் எல்லாரும் பிரகாஷ்ராஜை ஒருமுறையாவது சந்தித்தால் போதும். வாழ்க்கை கற்றுக் கொடுக்காத பாடத்தை அவர் கற்றுக் கொடுப்பார்.