போற போக்குல காதல்! என்னமோ சொல்ல வர்றாரு நயன்தாரா வுட் பி?

தெருமுனை பிள்ளையாருக்கு நடந்து போய் தேங்காய் உடைக்கிற தாமதம் கூட இனி ஆகாது. வேக வேகமாக வீட்டிலேயே உடைத்துவிட்டு கிளம்புகிற அளவுக்கு ‘டைட்டில்’ பிரச்சனை விஷயத்தில் ‘நமுத்து’ப் போயிருந்தார் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவர் முன்பு தயாரித்த ‘என்னை அறிந்தால்’, படமும் சரி. ‘வேதாளம்’ படமும் சரி. தலைப்பை (அவரே) தெரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஆனால் இனி வரப்போகும் காலம் அப்படியல்ல அவருக்கு.

அஜீத் கூட்டணிக்கு சற்றே இடைவெளி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியுடன் கூட்டு சேர்ந்துவிட்டாரே? அதனால்தான்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ கூட்டணி மீண்டும் அப்படியே இணைகிறது. என்ன ஒன்று? எக்ஸ்ட்ரா அட்ராக்ஷனாக இணைந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. தேன்ல இன்னும் கொஞ்சம் தித்திப்பை கலந்த மாதிரி த்ரிஷாவின் வரவை நயன்தாராவே வகுத்துக் கொடுத்தார் என்கிறது இன்னொரு தகவல். அதிருக்கட்டும்… இந்த படத்திற்காக அட்வான்சை கையில் வாங்கிய உடனேயே படத்தின் தலைப்பு இதுதாங்க என்று கூறிவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

அவருக்கு பிடிச்சா இவருக்கு பிடிக்கல… இவருக்கு பிடிச்சா அவருக்கு பிடிக்கல… இவங்களுக்கெல்லாம் பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்கல என்கிற எந்த பஞ்சாயத்தும் இல்லை இந்த தலைப்பு விஷயத்தில். அப்படியொரு தலைப்பை காதல் வழிய வழிய கொடுத்துவிட்டாராம் விக்னேஷ் சிவன்.

அப்படியென்ன தலைப்பு? ‘போற போற போக்குல காதல்’!

‘நின்ன வாக்குல நிச்சயதார்த்தம்’னு கூட எடுங்க. அதான் விக்னேஷ் சிவன் படத்தை ரசிக்கவென்றே பெரும் கூட்டம் காத்திருக்கிறதே?!

Read previous post:
எடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா?

ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம்...

Close