பிரசாந்த் அழைப்பு தமன்னா பதில் என்ன?

இந்தியில் கரீனா கபூருக்கு டஃப் கொடுக்க கிளம்பிவிட்டார் தமன்னா. நடுவில் சில காலம் அவர் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தாலும், தெலுங்கு ஃபீல்டு இவரை கொண்டாடிக் கொண்டிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது. தமன்னா விட்டுப் போன இடத்தில்தான், திட்டு திட்டாக தேன் மிட்டாயை விற்றுக் கொண்டிருந்தார்கள் இங்கிருக்கும் பிற நடிகைகள். சரி… ஏன் இப்போது சம்பந்தமேயில்லாமல் ஒரு தமன்னா புராணம்?

காரணம் இருக்கிறது.

அஜீத்தின் வீரம் படத்தில் தனது தங்க இடுப்பை காட்டி, தமிழ்நாட்டின் தங்க மார்கெட்டையே பல்லிளிக்க வைத்த தமன்னா, அதற்கப்புறம் படங்களை ஒப்புக் கொள்கிற விஷயத்தில் தொடர் நிதானம் காட்டி வருகிறார். இந்த நேரத்தில் அவரை அணுகியதாம் பிரசாந்த் தரப்பு. பொன்னர் சங்கர், படத்திற்கு பிறகு சற்றே ஒதுங்கியிருந்த பிரசாந்த், மீண்டும் சின்னப்பையன் போல உடல் இளைத்து தனது பழைய புல்லட்டை ஸ்டார்ட் பண்ணிவிட்டார். அதன் வேகம் எப்படியிருக்கும் என்பதைதான் இன்டஸ்ட்ரியின் போட்டியாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரசாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சாஹசம் படத்தை ஏகப்பட்ட கோடிகள் செலவு செய்து இழைத்துக் கொண்டிருக்கிறார் அவரது அப்பா தியாகராஜன். இந்த படத்தை இயக்குபவர் அருண் ராஜ்வர்மா என்ற புதியவர்.

இந்த படத்தில்தான் தன்னுடன் ஜோடியாக நடிக்க தமன்னாவை அழைத்தாராம் பிரசாந்த். இந்த அழைப்பை தமன்னா ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்று சாஹசம் படம் தொடர்பான பிரஸ்மீட்டில், இந்த தமன்னா தகவலை ரகசியமாகவே வைத்திருந்தார் தியாகராஜன். தமன்னா போக இந்த படத்தில் பிரசாந்துடன் ஒரு பாடலுக்கு ஆட போகிறாராம் நர்கீஸ் பக்ரி. இவர் பிரபலமான இந்தி நடிகை.

பக்கிரி என்றால் ஏழை என்று பொருள். ஆடை விஷயத்தில் பக்கிரியாக இருப்பார் போலிருக்கிறது இந்த நர்கீஸ் பக்ரி.

Read previous post:
மோடி பதவியேற்பு விழாவில் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினி?

மோடி பங்கேற்பு விழாவில் ரஜினி கலந்து கொள்ளதான் ஆசை கொண்டிருந்தார். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சே வந்திருந்து அந்த ஆசையில் ஒரு பொக்லைன் மண்ணை அள்ளிப் போட்டார்....

Close