டைரக்டர் ஹரியை தயாரிப்பாளர்கள் கொண்டாடுவது ஏன்? இதோ சில காரணங்கள்!

காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கமர்ஷியல் படங்களில் அவர் ஹரி!

பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘தமிழ்’ என்கிற படம்தான் ஹரியின் முதல் படம். அதற்கப்புறம் சுமார் ஒரு டஜன் படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ஹரியால் எந்த ஒரு புரட்யூசருக்கும் அண்டர்வேர் கிழிந்ததில்லை. எடுக்கிற எல்லா படங்களும் சூப்பர் ஹிட் ஆகிவிடாதுதான். ஆனால் சுமார் ஹிட், சூப்பர் ஹிட், மாஸ் ஹிட் இந்த மூன்று வகை படங்கள்தான் ஹரி இதுவரை தந்திருக்கும் பாக்ஸ் ஆபிஸ் புள்ளி விபரம். தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதை விட, தன்னை வைத்து படம் பண்ணுகிற தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் அவர். அவரது லேட்டஸ்ட் படமான பூஜை கூட 100 நாட்களில் முடித்து தருவதாக சொல்லப்பட்டு 90 நாட்களில் முடிக்கப்பட்ட படம்.

கையில் ஒரு லத்தியை கொடுத்தால் போலீஸ். ஒரு பிரம்பை கொடுத்தால் கண்டிப்பான கணக்கு வாத்தியார். ஒரு துப்பாக்கியை கொடுத்தால் கண்டிப்பான ஒரு ராணுவ வீரன். இது எதுவும் இல்லாமல் நின்றால் கண்டிப்பான ஒரு இயக்குனர். ஹரியின் மிடுக்கை இப்படிதான் தரம் பிரிக்க முடியும். அந்தளவுக்கு இவர் மீது அலறல் காட்டுவார்கள் அவர் படத்தில் பணியாற்றும் டெக்னீஷியன்கள். ‘காலையில் ஷுட்டிங்குக்கு லேட்டா வந்தால் யாரா இருந்தாலும் திட்டுவேன்’ என்று போல்டாகவே பேச ஆரம்பிக்கிறார் ஹரி.

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகணும் என்பதுதான் என்னோட லட்சியம். ஆனால் வீட்டில அப்பாவுக்கு அந்த ஜாப் பிடிக்கல. அதனால் நேரடியாக ஐ.பி.எஸ் எழுதி போலீஸ் அதிகாரியா ஆகிலடாம்னு அதுக்காக பிரிப்பேர் ஆகி எக்ஸாம் எழுத வந்தேன். கொஸ்டீன் பேப்பரை பார்த்த பிறகுதான் தெரிஞ்சுது, அது ஒண்ணும் சாதாரண விஷயமில்லேன்னு. அதற்கப்புறம் ரியல் எஸ்டேட் பிசினஸ் செஞ்சேன். இருந்தாலும் மனசு எதையாவது பெரிசா செய்யணும்னு ஆசைப்பட்டுகிட்டேயிருந்திச்சு. நாள் முழுக்க கடுமையா உழைச்சு தொழில் கத்துக்கிற மாதிரி ஒரு துறை வேணும்னு நினைச்சேன். வடபழனி சாலிகிராமம் ஏரியாவில் வசிச்சதால, வீட்டை சுற்றி ஸ்டுடியோக்கள். திடீர்னு உள்ளே பூந்துட்டேன். செந்தில்நாதன் சார்ட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். அதற்கப்புறம் சரண் சார்ட்ட வொர்க் பண்ணினேன். அமுதா துரைராஜ் சார் மூலமா ‘தமிழ்’ பட வாய்ப்பு கிடைச்சுது. அன்று ஆரம்பிச்ச பயணம்…. இன்று வரை நல்லபடியா போயிட்டு இருக்கு’ இப்படி வந்த கதையை விவரிக்கிறார் ஹரி.

‘தயாரிப்பாளர்களின் இயக்குனர்’ என்று கொண்டாடப்படும் ஹரிக்கு அந்த நல்ல பெயர் வந்தது எப்படி? அதையும் அவர் வாயாலேயே கேட்டுவிடுவதுதான் உத்தமம்.

படத்தில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் வருதுன்னு வைங்க. அது எவ்வளவு நேரம் தேவைப்படும். படத்தில் எத்தனை செகன்ட் வருதுன்னு கால்குலேட் பண்ணி பார்ப்பேன். அதிக நேரம் தேவைப்பட்டால்தான் எட்டு லட்சம் செலவு பண்ணி ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுப்பேன். இல்லேன்னா, சி.ஜி. க்கு போயிடலாம்னு முடிவு பண்ணுவேன். அவ்வளவு ஏன்? ஹீரோயினுக்கு பதினைஞ்சாயிரத்துல புடவை வாங்கணும்னு வைங்க. அந்த ஷாட் லாங் ஷாட்டா? குளோஸ் அப்ல காட்டுனா, எவ்வளவு நேரம் அந்த புடவை ஸ்கீரின்ல தெரியும்னு யோசிப்பேன். ஜஸ்ட்… அரை நிமிஷத்துல கிராஸ் ஆகிற காட்சின்னு வைங்க, உடனே ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த புடவை வாங்குனா போதும்னு சொல்லிடுவேன். இப்ப புரியுதா? ஹரியை ஏன் இன்டஸ்ட்ரி கொண்டாடுதுன்னு?

தீபாவளிக்கு திரைக்கு வரப்போகும் பூஜை படத்தில் ஒரு வித்தியாசம் செய்திருக்கிறாராம் ஹரி. ஒரு சேசிங் காட்சியை முழுக்க முழுக்க டாப் ஆங்கிளில் எடுத்திருக்கிறார். ‘ஒரு கிராமத்தில் நடக்கிற இந்த காட்சியை ரசிகர்கள் பறவை ஆங்கிளில் பார்க்கும்படி எடுத்திருக்கோம். ரொம்ப வித்தியாசமா இருக்கும்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ஐ ஓப்பனிங் ’ ஹீரோன்னா அவருதான்…! சிவகார்த்தியேனை புகழும் சக ஹீரோ?

தமிழ்சினிமாவில் திடீர் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன்தான். ஆந்தையின் இறக்கை அடித்துக் கொள்வதை போலவே படபடவென பேசும் சுய ‘தம்பட்ட’ ஹீரோக்களுக்கு மத்தியில், ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அடித்துக்...

Close