காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், பெரியார், காமராஜ் படங்களுடன் தயாராகும் ரஜினி கட்சிக் கொடி!

எனது பெயரையோ, எனது படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார் ரஜினி. இருந்தாலும் ரஜினியின் சம்மதம் இல்லாமலே அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவங்கப் போகிறார்கள். திருப்பூரிலிருந்து உதயமாகும் இந்த கட்சியின் பெயர் ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகும் தினமான 12 ந் தேதியன்று அவரது பிறந்த நாளில் வெளியிடப்படுகிறது.

திருப்பூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் எஸ்.எஸ்.முருகேசன் என்பவர் ரஜினியின் அதிதீவிர ரசிகர். மாநில அளவில் ரஜினி மன்றத்தின் பொறுப்பிலும் இருக்கிறார். தனது ரியல் எஸ்டேட் நகர்களுக்கு கூட ரஜினியின் பெயரைதான் வைத்துக் கொண்டிருக்கிறார் பல காலமாக. ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற அடங்காத ஆசையுடன் சுற்றி வரும் முருகேசன், பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ரசிகர்கள் உதவியுடன் தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்துவிட்டார். இதற்கு ரஜினியின் ரீயாக்ஷன் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நாம் முருகேசனை தொடர்பு கொண்டோம். அவர் நம்மிடம், சார்… நான் கடந்த பல வருஷமா ரஜினி சார் ரசிகனாக இருக்கேன். ராஜாதிராஜா சமயத்தில் அவரை நேர்ல மீட் பண்ணியிருக்கேன். அதற்கப்புறம் அவர் பெயரில் நிறைய நலத்திட்ட உதவிகளை செஞ்சுகிட்டு இருக்கேன். ஐந்தாறு வருஷத்திற்கு மேல், தமிழ்நாடு ரஜினிகாந்த் தொழிற்சங்க பேரவை என்கிற அமைப்பை உருவாக்கி அதை முறையா பதிவு செய்தும் வச்சுருக்கேன். அதில் தமிழகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் உறுப்பினர்களா இருக்காங்க. தலைவருக்கு களங்கம் வர்ற மாதிரி எந்த செயலிலும் ஈடுபட மாட்டோம். அது மட்டுமல்ல, கடந்த பல வருங்களா மன்ற தலைவர் சுதாகரனை சந்தித்து எங்களோட செயல்பாடுகளை தெரிவிச்சிகிட்டும் இருக்கோம். முப்பது வருஷமா நாங்க செஞ்சுவரும் நலத்திட்ட உதவிகளையும், எங்கள் தொழிற் சங்க பேரவை செய்கிற நல்ல காரியங்களையும் ஆவணமா வைச்சுருக்கோம் என்றார்.

ஆனால் இவரது கட்சி துவங்கும் முயற்சி குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்தும் ரஜினி தரப்பிலிருந்து எவ்வித விசாரணையும் இன்னும் நடைபெறவில்லையாம்.

விரைவில் திருப்பூரில் இந்த தொழிற்சங்கம் சார்பில் ரஜினி ரசிகர்கள் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம் அவர். கட்சிக் கொடியில் ரஜினியின் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று அவர் விரும்பினாலும், ரஜினியின் சம்மதம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு கொடியில் ஒரு இடத்தை ஒதுக்கி வைப்பார்களாம். மற்ற இடங்களில் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பெரியார், காமராஜ் படங்களை பயன்படுத்துவதாக திட்டமாம்.

வெள்ளத்தை எத்தனை நாளைக்குதான் கட்டுப்படுத்த முடியும்?

2 Comments
  1. Tamilvaanan says

    Super Star Rajini will enter the politics. Tamil Nadu’s next Chief Minister Rajini.

  2. Elangovan says

    Thalaivaa Please come to politics

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுதான் அஜீத்தின் ‘என்னை அறிந்தால் ’ கதை!

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டு வெற்றி விழாவில் கலந்து கொள்வதற்காக ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங்கிலிருந்து பர்மிஷன் போட்டுவிட்டு ஐதராபாத்திற்கு ஓடிச் சென்றார் அனுஷ்கா. விழா...

Close