அஜீத் விஜய் விரிசல்! நடுவில் நுழைந்த ஷாம்லி?
தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல் புளகாங்கிதப்படும் சிலருக்கு, அதிலிருக்கும் சூட்சுமம் அவ்வளவு சீக்கிரம் புரிந்திருக்காது. எல்லாம் மேற்படி டாப் ஹீரோக்களின் ரசிகர்களை மடக்கி, தங்கள் படங்களையும் பார்க்க வைக்கும் தந்திரம்தான்.
ஹீரோக்கள் செய்து வந்த வேலையை இப்போது ஹீரோயின்களும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘கங்காரு’ படத்தில் சற்று கோபமாகவே அதை செய்தார் அப்படத்தின் நாயகி பிரியங்கா. இவரைப்போலவே ‘நான் தல ரசிகை’ என்று சொல்லி வரும் ஹீரோயின்களுக்கு நடுவில், நான் தளபதி ரசிகையாக்கும்… என்று முழக்கமிடுகிறார் ஷாம்லி. என்னது ஷாம்லி விஜய் ரசிகையா? என்று அதிர்ச்சி ஏற்படுகிறதல்லவா?
யெஸ்… ‘வீர சிவாஜி’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வரும் ஷாம்லி, அப்படத்தில் விஜய் ரசிகையாக நடித்திருக்கிறார். கடந்த பல வருஷங்களாகவே விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் வெறி பிடித்தார் போல மோதிக் கொள்கிறார்கள். இதை அஜீத்தும் விஜய்யும் கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் குரல்கள் எழுகின்றன. இந்த நிலையில், அஜீத் வீட்டிலிருந்தே ஒருவர் வந்து, நான் விஜய் ரசிகை என்று சொல்லும்போது இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையேயான மோதலின் சூடு கொஞ்சம் குறையும் அல்லவா?
இப்படி நடிக்கப் போகிறேன் என்பதை அஜீத்தின் சொல்லி, ஒப்புதல் வாங்கிய பின்னே நடித்தாராம் ஷாம்லியும்!
To listen Audio Click Below:-
https://youtu.be/xsP3RINDzzM