குறும்பட இயக்குனர்களின் குர்ராங் குர்ராங் மைண்ட்?
குறும்படம் எடுக்கிற குரங்காடா நீ? இப்படியொரு டயலாக் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் இடம் பெற்றிருந்தது. தம்பி ராமய்யா பேசுகிற அந்த டயலாக்கை சிரிக்கிற வினாடியில் கடந்து போய் விடுவார்கள் ரசிகர்களும். ஆனால், அந்த வசனத்திற்குள்ளிருக்கிற அருமை பெருமைகளை கேட்டால், அழுதே விடுவார்கள் போலிருக்கிறது கோடம்பாக்கத்தில்.
பத்து வருஷம், இருபது வருஷம் போராடிய எங்களுக்கெல்லாம் இன்னும் ஒரு விடிவு காலம் வரலே. ஆனா ஒரு பத்து நிமிஷம் குறும்படத்தை எடுத்து வச்சுகிட்டு என்னா சீன் போட்றாங்க? என்று பொரும ஆரம்பித்திருக்கிறார் தொழில் அனுபவம் வாய்ந்த தொன்மைகால உதவி இயக்குனர்கள். இதை கூட பொறாமையின் சீற்றமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவர்களின் நடவடிக்கையை கண்ணீரும் கம்பலையுமாக போகிற இடத்திலெல்லாம் விமர்சித்துக் கொண்டிருக்கிறாராம் சமீபத்தில் படமெடுத்து சறுக்கிய ஒருவர்.
ஒரு குறும்பட இயக்குனரின் சிடியை நம்பி கோடிக்கணக்குல இறக்குனேன். ஆயிரத்துல கூட வசூல் இல்லை என்று புலம்பும் அவர் சிக்கியது எப்படி? அங்குதான் வேலை செய்கிறது குறும்பட இயக்குனர்களின் ‘குர்ராங் குர்ராங் மைண்ட்.’ தன் முதல் படத்திலிருந்தே குறும்பட இயக்குனர்களை வைத்து வேலை வாங்கியவர் இவர். நிறைய சம்பாதித்தும் இருந்தார். அந்த நம்பிக்கையில் இந்த குறும்பட பையனின் டி.வி.டி யை தன் கம்பெனியில் படம் இயக்கிய இரண்டு பேரிடம் கொடுத்து இதை படமாக்கலாமா பாருங்க என்றாராம். அவருக்கு தெரியாது… இந்த புதுப்பையனே அவர்கள் சொல்லிதான் இங்கே வந்தார் என்கிற விஷயம். படத்தை பார்த்தவர்கள் நல்ல சர்டிபிகேட்டாக கொடுக்க, படம் வளர்ந்தது. இப்போது உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணாவும் ஆக்கியது தயாரிப்பாளரை.
‘இப்போதுதான் எனக்கு தெரியுது… அவங்க எல்லாம் சிண்டிகேட் போட்டு வேலை பார்த்துருக்காங்க’ன்னு என்று புலம்புகிறாராம்! அப்படியே இன்னொரு நெருடல். அண்மையில் ஒரு குறும்பட திரையிடல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் பீட்சா, ஜிகிர்தண்டா இயக்குனர் கார்த்திசுப்புராஜ். ஆறு மணி நிகழ்ச்சிக்கு அவர் வந்தது எத்தனை மணிக்கு தெரியுமா? சுமார் எட்டுக்கு. அதுவரை நிகழ்ச்சியும் துவங்கப்படவில்லை. காத்திருந்தார்கள். முன்னதாக வந்து அமர்ந்துவிட்ட பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், தயாரிப்பாளரும் இயக்குனருமான நடிகர் தியாகராஜனும் நெ ளிய ஒரு வழியாக வந்து சேர்ந்தார் அவர். ஒரு மரியாதைக்கு கூட தன் தாமதம் குறித்து ஸாரி கேட்கவில்லை.
கமலோ, ரஜினியோ கூட நிகழ்ச்சிகளுக்கு வர தாமதமானால் மைக்கை பிடித்ததுமே ‘கொஞ்சம் லேட்டாயிருச்சு. ஸாரி’ என்று பலமுறை கூறியிருக்கிறார்கள். அவங்களை விடவெல்லாம் பெரிசா வளர்ந்துட்டோம்னு நினைச்சிட்டாரு போல இந்த முன்னாள் குறும்படம்?
//தன் முதல் படத்திலிருந்தே குறும்பட இயக்குனர்களை வைத்து வேலை வாங்கியவர் இவர். நிறைய சம்பாதித்தும் இருந்தார்.//
சம்பாதிக்கும் போது தெரியவில்லயா குறும்பட இயக்குனர்களின் ‘குர்ராங் குர்ராங் மைண்ட்.’???
கோடம்பாக்கத்தில் இருக்கிற உதவி இயக்குனர்கள் 99% ஸ்டார்களுக்காக படம் பண்ண இருப்பவர்கள். தன்னை நம்பாமல் ஸ்டார்களை நம்பி இருக்கும் இவர்களால் கடைசிவரை படம் எடுக்க முடியாது. அப்படியே வாய்ப்பு கிடைக்க 20, 30 வருஷம் wait பண்ணித்தான் ஆக வேண்டும். ஆனால் குறும்பட இயக்குனர்கள் ஸ்டார்களை நம்பாதவர்கள். அதுதான் வித்தியாசம்.