ரஜினி மகளை வம்புக்கு இழுத்த சிம்பு
ட்விட்டர் இருக்கும் வரை சிம்புவின் புகழ் ஓயவே ஓயாது! யாராவது ஒதுங்கிப் போனால் கூட சட்டையை பிடித்து இழுத்து, நான் இங்கதான் இருக்கேன் தெரியுமா என்பதை போலவே ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளை கிளப்பிவிடும் வழக்கம் சிம்புவுக்கு உண்டு. இந்த முறை அவரது பரபர கைகளுக்கு தீனி போட்டிருக்கிறது கோச்சடையான். உலகம் முழுக்க இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும், முதல் மூன்று நாள் வசூலே 42 கோடி என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறிவருகிறார்கள்.
இந்த நேரத்தில்தான், யானையில் வாலில் பட்டாசு கட்டியிருக்கிறார் சிம்பு. என்னவென்று? கோச்சடையான் திரைப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தரம் ஹாலிவுட் படங்களை போல இல்லை என்று கூறியிருக்கிறார். நல்லவேளையாக அந்த படத்தில் பங்கு பெற்ற கே.எஸ்.ரவிகுமாரையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் பாராட்டியிருக்கிறார் அவர். சிம்புவின் இந்த ட்விட் உலகம் முழுவதுமிருக்கிற ரஜினி ரசிகர்களுக்கு பெருத்த எரிச்சலை வரவழைத்திருக்கிறது.
ஆனால் மிகவும் பக்குவமாக இந்த விஷயத்தை டீல் பண்ணியிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். எப்படி தெரியுமா? உங்கள் கருத்துக்கு நன்றி என்று ஒரு சில வார்த்தைகளில்தான். பல் குச்சியை வச்சு பாறாங்கல்லை நெம்ப முடியாதுன்னு சவுந்தர்யாவுக்கு தெரியாதா என்ன? சிம்பு அப்படிதான்… அப்படியேதான்!
Super Star Rajini Vazga. எங்கள் லிங்காவே வருக வெல்க
லிங்கா படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு உள்ளங்கள்:
ஷீலா, உமா, பாரதி, சங்கர், குமரன், சேகர்