புன்னகை இளவரசி சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
கடந்த 2012 ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. தமிழ்சினிமாவில் அழகான சிரிப்புக்கு அத்தாரிடி என்று எடுத்துக் கொண்டால், அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் சினேகா என்கிற அளவுக்கு புன்னகை அரசி. அவரது சிரிப்பை இன்னும் எந்த ட்யூப் லைட்டுகளும் சரி, மெர்க்குரி லேம்களும் சரி, பீட் பண்ணவே இல்லை.
திருமணத்திற்கு பிறகு மெல்ல மெல்ல நடிப்பதை குறைத்துக் கொண்டார் அவர். திருமணத்திற்கு முன்பாக அவர் நடித்து மிச்சம் வைத்த படங்கள் எல்லாம் அவரது திருமணத்திற்கு பின் வந்து சினேகாவின் இடத்தை நிரூபித்துக் கொண்டேயிருந்தன. இப்போது அவரது ஒளிவிளக்கு சிரிப்புக்கு மேலும் அர்த்தம் கொடுப்பது மாதிரி ஒரு சந்தோஷம். சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தன் வளைக்காப்பு திருவிழாவை உறவினர்கள் மற்றும் தோழிகளுடன் உற்சாகமாக கொண்டாடிய சினேகா, புது இளவரசனுக்கு வைக்கப் போகும் பெயர் என்னவோ? தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறது திரையுலகம்.