சோனா முடிவு, திரையுலகம் திடுக்!

“எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை” என்று மன்சூரலிகான் அறிவித்தால் எப்படி உலகம் வாய்விட்டு சிரிக்குமோ…. அதைவிட பெரிய கெக்கேக்கே… இதுதான். நடிகை சோனா இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லா பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது. இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர்ன்னு வரும் போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள் நான் நல்ல காரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் அவர்.

சோனாவின் இந்த அறிவிப்பு காட்டுத்தீ போல பரவியதால், “இனி கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க யாரை அணுகுவது? அந்த இடத்தை நிரப்ப அந்த ஐஸ்வர்யாராயால் கூட முடியாதே” என்று தீயாக கொதித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா இயக்குனர்களின் மனசு.

யாராவது சூழ்நிலையின் அவசியம் கருதி ஃபயர் என்ஜினிக்கு போன் செய்தால் நல்லது!

Read previous post:
மகனை தொடர்ந்து மகளையும் சினிமாவுக்குள் நுழைக்கிறார் விஜய் சேதுபதி?

தமிழ்சினிமாவில் தான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவிலேயே கொட்டுகிற ஹீரோக்களை அந்த கலைத்தாய் கைவிடுவதேயில்லை. மிக மூத்த நடிகர்களில் ஆரம்பித்து, நேற்று வந்த ஆர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஸ்ரீகாந்த்...

Close