கண்கலங்கிய சரத்! பிரச்சனைக்குரிய கட்டிட ஒப்பந்தத்தையும் தானே முன் வந்து கேன்சல் செய்தார்!

இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சரத் என்றதும், “வென்றவர்கள் அழைப்பார்கள்… அது வழக்கம்! ஆனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் அழைக்கிறார். என்ன சொல்ல போகிறாரோ?” என்கிற குழப்ப நிலையில் சென்ற பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. எந்த பிரச்சனையை முன் வைத்து நடிகர் சங்கத்தில் சரத்குமாரும் அவரது அணியும் தோற்கடிக்கப்பட்டார்களோ, அந்த நடிகர் சங்க கட்டிட பிரச்சனைக்கு காரணமான ஒப்பந்தத்தை தானே முன் வந்து ரத்து செய்துவிட்டதாக கூறினார் சரத். அதற்கான ஆதாரங்களையும் முன் வைத்தார்.

SPI சினிமாஸ் நிறுவனத்துடன் நடிகர் சங்கம் போட்ட ஒப்பந்தம்தான் அது. 29 வருடங்கள், 9 மாதங்களுக்காக போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தை செப்டம்பர் 29 ந் தேதியே அவர் கேன்சல் செய்திருந்தார். தனிப்பட்ட முறையில் SPI சினிமாஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியவர், தனது பெயருக்கு பெரும் களங்கம் விளைவிக்கப்பட்டிருப்பதாக குமுற, முழுக்க முழுக்க சரத்குமாரின் வேண்டுகோளுக்காக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாம் SPI சினிமாஸ். “நடக்கும் அனைத்து பிரச்னைகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் மேல் பரிதாபப்பட்டு ரத்து செய்ய ஒப்புக்கொண்டார்கள்” என்றார் சரத்.

“பொதுவாழ்க்கைக்கு வந்த இந்த முப்பது வருடத்தில் நான் யாரையும் ஏமாற்றியதாக யாரும் என் மீது குற்றம் சுமத்தியதில்லை. நாசர் அணியினர் வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டினார்கள்” என்று கூறும்போது அவரையும் அறியாமல் அவர் கண்ணீர் சிந்த அந்த இடமே அமைதியானது.

தேர்தலுக்கு முன்பே நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததை நீங்கள் அறிவித்திருந்தால் தேர்தல் முடிவே மாறிப் போயிருக்குமே? என்ற கேள்விக்கு, அப்படி செய்திருந்தால் நான் பயந்து கொண்டு ரத்து செய்துவிட்டதாக சொல்லியிருப்பார்கள். அதனால் சொல்லவில்லை என்றார்.

சற்று நெகிழ்ச்சியாகவும் பரிதாபமாகவும் முடிந்தது இந்த பிரஸ்மீட்! ஆனால் இதை இப்படியே விடுவதாக இல்லை விஷால் அணி.

ஒப்பந்தம் ரத்து செய்தது பற்றி பேசிய விஷால், பொதுக்குழு, செயற்குழுவின் ஒப்புதலோடுதான் ஒப்பந்தம் போட்டேன் என்று கூறியவர், ஏன் தன்னிச்சையாக ஒப்பந்தத்தை ரத்து செய்தார்? அதற்கு பதில் சொல்ல சொல்லுங்க என்கிறார்.

இவர்களில் புலி வால் பிடித்த நாயர் யார் என்பதுதான் புரியவில்லை!

2 Comments
 1. Prakash says

  திடிர்ன்னு உனக்கு எங்க, எப்படி ஞானோதயம் வந்தது ???
  இதெல்லாம் தோல்வியின் வெளிப்பாடு. இவன் சரியான மோசடி பேர்வழியாக இருப்பான் போல இருக்கு. இவன் மீது உடனடியாக 420 வழக்கு போட வேண்டும். திரு விஷால் அவர்களே, இந்த சரத் குமாரை நம்ப வேண்டாம். அந்த டாகுமென்ட்-ஐ ஒரு முறை தரவாக படித்து பார்த்து ADVOCATE , AUDITOR ஆகியோரை வைத்து ஆய்வு செய்ய வேண்டும். அவன் சரியான மோசடி பேர்வழி. பார்த்து கவனமாக செயல்படவும்.
  வாழ்த்துக்கள்.

  1. Raj says

   Vishal unakku soru pottar, Sarath vanthu athai eduthukondar? Poi velayay paarunga Sir.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெற்றி வெற்றி ! கட்டிடமும், கல்யாணமும்! விஷாலின் அடுத்த திட்டம்!

கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான்....

Close