அடப் பாவமே… விஜய்க்கு இப்படியா அவமானம் வந்து சேரணும்?

இதை விஜய் செய்ய சொல்லியிருக்கப் போவதில்லை. அப்படிப்பட்ட ஆளும் அவரில்லை. ஆனால் அவரது வெறி பிடித்த ரசிகர்கள் சிலரால், விஜய்க்கே அவமானம்!

சில தினங்களுக்கு முன் வெளிவந்த கபாலி டீஸர், ஒட்டுமொத்த தமிழுலகத்தையே கிடுகிடுக்க வைத்துவிட்டது. யூ ட்யூப் நிறுவனமே தனிப்பட்ட ரஜினிக்கு மரியாதை செய்கிற அளவுக்கு போயிருக்கிறது அதன் ஹிட்ஸ். விஜய் அஜீத்தின் முந்தைய பட ட்ரெய்லர், டீஸர் ஹிட்டுகளை இந்த படம் சர்வசாதாரணமாக தட்டிவிட்டு முன்னேறியதால், பேரதிர்ச்சி அடைந்தது சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் துடிப்பான ரசிகர்கள்தான்

அவர்களில் விஜய் ரசிகர்கள் செய்த வேலை, இன்னும் பல காலத்திற்கு ஆறாத வடுவாக பதிந்திருக்கும். வெளிப்படையாகவே “கபாலி டீஸரை யாரும் பார்க்காதீங்க. நீங்களும் பார்த்து அதன் ஹிட்ஸ் கூடினால், அது நம்ம தலைவரின் பட சாதனையை முறியடிப்பதாக அமைந்துவிடும். அதற்கு நாமே காரணமாக இருக்கக் கூடாது” என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

பாகுபலி தியேட்டர்ல எலி படத்தை போட்ட மாதிரி என்னா அமர்க்களம்? வெறுப்பு?

Read previous post:
மாமனார் தெறி!மருமகன் டபுள் தெறி!

இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது?...

Close