பிரகாஷ்ராஜுக்கு கட்டையை போட்ட விஜய்?
ஒரு காம்பினேஷன் ஹிட்டாகிவிட்டால், அந்த காம்பினேஷனை அவ்வளவு சீக்கிரம் பிரிக்க மாட்டார்கள் சினிமாவில். ரசிகர்கள் விரும்புவது ஒரு காரணமாக இருந்தாலும், வியாபார ஏரியாவில் இந்த ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தைக்கு தனி அந்தஸ்தே இருக்கிறது. அதனால்தான் இப்படி.
அப்படி பார்த்தால் பிரகாஷ்ராஜும், விஜய்யும் இணைந்த படங்கள் எல்லாமே செம ஹிட் ஆகியிருக்கின்றன. இந்த நல்ல விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு அட்லீ சொன்ன ஒரு ஐடியா, ‘அட்லீஸ்ட்’ லெவலில் கூட அக்சப்ட் செய்யவில்லை விஜய். அட இதென்னடா கூத்து?
பொதுவாக விஜய் படங்களிலெல்லாம் யோசிப்பது, வடிவம் தருவது போன்றவை வேண்டுமானால் இயக்குனர் கையில் இருக்கலாம். ஆனால் எது வேணும்? எது வேணாம்? என்று டிக் அடிக்கிற உரிமை விஜய்க்குதான். படத்தில் வரும் பாடல்களை கூட, ட்யூனாக கேட்டு திருப்தியடைந்தால்தான் அடுத்த மெட்டுக்கு போக விடுவார் விஜய். நிலைமை அப்படியிருப்பதால், இந்த படத்தில் விஜய்க்கு அப்பா ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை மட்டும் அட்லீ முடிவு செய்துவிட முடியுமா என்ன?
பிரகாஷ்ராஜ் அந்த கேரக்டரில் நடித்தால் சூப்பராக இருக்கும் என்று நினைத்தாராம் அவர். உடனே விஜய்யிடம் ஐடியா கேட்டிருக்கிறார். பொறுமையாக கேட்டுக் கொண்ட விஜய், ‘பல படங்களில் எனக்கு வில்லனா நடிச்சுருக்கார் பிரகாஷ்ராஜ். இப்போ ரொம்ப சென்ட்டிமென்ட் நிறைஞ்ச அந்த கேரக்டர்ல எனக்கு அப்பாவா நடிச்சா அது அவ்வளவு பொறுத்தமாவா இருக்கும்? அதனால…. இயக்குனர் இமயம் பாரதிராஜாவை கேளுங்களேன். அவர் நடிச்சா அந்த கேரக்டருக்கு பொறுத்தமா இருக்கும். நானும் பாண்டியநாடு படம் பார்த்துட்டு அவரை ரொம்ப ரசிச்சேன்’ என்றாராம். இதைவிட வேறென்ன சாய்ஸ் இருக்க முடியும்? சடக்கென்று தனது ஐடியாவை பாரதிராஜாவுக்கு மாற்றிவிட்டார் அட்லீ.
‘பெருசு’ என்ன சொல்லப் போவுதுன்னு தெரியலையே?