அதுக்குள்ள அப்பாவா நடிக்கணுமா? அஞ்சாத விஜய்! அன் லைக் ரசிகர்கள்!!
எவ்வளவு நல்ல கதையாக கூட இருக்கட்டுமே… ‘சார். இந்த படத்துல நீங்க உங்க எல்.கே.ஜி பையனை நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது….’ என்று எந்த டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தாலும், ‘நான் அடிக்கறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து கிளம்பிடுறீங்களா?’ லுக்கிலேயே பார்ப்பார்கள் முன்னணி ஹீரோக்கள். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இளம் ஹீரோயின்கள். ‘உங்களுக்கு கருவுல ஒரு குழந்தை இருக்கு’ன்னு கூட சொல்ல அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த பாழாப்போன தேசத்துலதான் இமேஜ் எல்லாம். அப்படி கதைக்காக ஒரு படத்தில் நடித்தால் கூட, அதையே அட்வான்ட்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு அடுத்த படத்திற்கு கதை சொல்ல வரும் இயக்குனர், ‘சார்… உங்க பையனோட ப்ளஸ்டூ ரிசல்ட்டை நீங்க கம்ப்யூட்டர் சென்டர்ல பார்த்துட்டு இருக்கும் போது நாலு ரவுடிப்பசங்க கிராஸ் ஆகுறாங்க…’ என்று கதை சொல்ல ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நொன்னைக்குதான் ‘வேணாம்யா… உங்க அப்பர் புராணம்’ என்று ஆரம்பத்திலேயே தட்டிக் கழித்துவிடுகிறார்கள் நம்ம ஹீரோக்களும். (அஜீத் என்னை அறிந்தால் படத்துல அப்படி நடிச்சாரே? என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது வேற இது வேற…)
அட்லீ இயக்கும் படத்தில் விஜய் சிறு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கப் போகிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்படும் ரசிகர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியாது. ஆனால் இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத புலி படத்தின் அடிஷனல் செய்தி ஒன்று. புலி பட ட்ரெய்லரை இதுவரை 45 லட்சம் பேர் பார்த்து அந்த டீஸரை சாதனை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பத்தாயிரம் பேர் அன் லைக் கொடுத்துவிட்டார்களாம் இந்த ட்ரெய்லருக்கு.
இதனால் புலி படக்குழு ஏகத்திற்கும் அப்செட்.