ஹல்லோவ்… காஜல் இருக்காங்களா? ஹீரோ அழைப்பு, ஹீரோயின் ஓட்டம்!

‘ஒருத்தர் ஜெயிச்சுட்டா போதும்… ஒவ்வொருத்தரா உள்ள கொண்டு வந்து மிரட்டிப்புடணும்டா…’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிவார்கள் சினிமாவிலும், அரசியலிலும்! அரசியலில் கூட வொர்க்கவுட் ஆகிவிடும். ஆனால் சினிமாவில் ரொம்ப ரொம்ப சேதாரம்! தப்பி தவறி ஒன்றிரண்டு பேர் தப்பித்துக் கொள்வார்கள். மீதி அத்தனை பேருக்கும் பெருமாள் கோவில் நாமக்கட்டிதான் பிரசாதமாக கிடைக்கும்.

நடிகர் ராஜேஷின் பிரதர் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். யாருக்காவது தெரியுமா? நாசரின் பிரதரும் கூட அப்படிதான். ஒருவருக்கும் தெரியாது. இப்படி நிறைய பேர் க்யூவில் நிற்கிறார்கள். அட… அவங்கள்லாம் குணச்சித்திரம். நாங்க ஹீரோவாக்கும் என்று சொன்னாலும் கூட, ஆர்யாவின் தம்பி சத்யாவின் கதி என்னாச்சு? ஜீவாவின் பிரதர் ஜித்தன் ரமேஷின் கதி என்னாச்சு? இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமலும் தன் தம்பியையும் பெரிய்ய்ய ஹீரோவாக்கிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் லாரன்ஸ். நல்ல விஷயம்தான். அதற்கு ஒரு மார்க்கெட் தந்திரமும் வேண்டுமல்லவா? அங்குதான் லாரன்சின் போன் வந்தால் தெறித்து ஓடுகிறார்களாம் ஹீரோயின்கள்.

அறிமுகமாகும் ஹீரோக்கள், தன்னுடன் ஜோடியாக மார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் ஹீரோயின்களை சேர்த்துக் கொண்டால், அவர்களுக்காக உள்ளே வருகிறார்கள் ரசிகர்கள். அப்படியே இந்த அறிமுக ஹீரோவையும் பிடித்துப் போய்விடுகிறது. அதற்கப்புறம் தொடர்ந்து இவருக்கு கொடி தூக்க தயாராகிவிடுவார்கள். இந்த பார்முலாவை தெரிந்து கொள்கிறவர்கள்தான், அறிமுகமாகும் போதே பல கோடிகள் கேட்டாலும், போகட்டும்… என்று பெரிய ஹீரோயினுக்கு வலை வீசுகிறார்கள்.

அப்படிதான் தனது தம்பியுடன் நடிப்பதற்காக எத்தனை கோடி கேட்டாலும், நான் தயார் என்று நயன்தாராவில் ஆரம்பித்து தமன்னா வரைக்கும் வலை வீசுகிறாராம் லாரன்ஸ். சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு போன் அடித்து இப்படியொரு விஷயத்தை சொல்ல, நீங்கள் தொடர்பு கொள்ளும் அழகி, இன்னும் ஏழு மாசத்துக்கு போனை எடுப்பதாக இல்லை என்கிற அளவுக்கு தெரித்து ஓடினாராம். இப்போதெல்லாம் போன் ரிங் ஒலித்தால் கூட அது சைரன் சப்தமாக அவர் காதில் ஒலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே?

Read previous post:
அதுக்குள்ள அப்பாவா நடிக்கணுமா? அஞ்சாத விஜய்! அன் லைக் ரசிகர்கள்!!

எவ்வளவு நல்ல கதையாக கூட இருக்கட்டுமே... ‘சார். இந்த படத்துல நீங்க உங்க எல்.கே.ஜி பையனை நீங்க ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது....’ என்று எந்த டைரக்டர் கதை...

Close