மீண்டும் தாணு! விஜய் முடிவால் கோடம்பாக்கம் பரபர?

“ரஜினி ஒண்ணும் கடவுள் இல்லையே, எதுக்கு இவ்ளோ பெரிய ஆர்ப்பாட்டம்?” என்று முகவாயில் இடித்துக் கொள்கிற எல்லாருக்குமே கை வேறொரு பக்கம் நீண்டு, “கபாலி டிக்கெட் இருக்கா?” என்கிறது. “அதாண்டா எங்க ரஜினி” என்று ஆவேசம் காட்டுகிறார்கள் ரஜினியின் அதி தீவிர ரசிகர்கள். இப்படி ரஜினியை வைத்து தமிழகம் முழுவதுமே படு பயங்கர ஜல்லிக்கட்டும், பலமான மாடு முட்டும் போய் கொண்டிருக்க, கபாலி ரிலீஸ் ஆகிற 22 ந் தேதி தங்கள் படப்பிடிப்பையே கேன்சல் செய்துவிட்டு தியேட்டருக்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு, ஜெய் போன்ற ரஜினி ரசிகர்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அஜீத் விஜய் இருவரது மன நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு இருக்கக் கூடும். ஆனால் தாழ்பாளை திறந்தால்தானே உள்ளே இருக்கிற வார்த்தைகள் தென்படும்? வாயை இறுக மூடி இருவரும் சைலன்ட். ஆனால் ஒரு விஷயம் தெரிய வருகிறது. அதுவும் உற்சாகமான விஷயம்தான்.

கபாலி களேபரங்களை ஒருபக்கம் சிந்தாமல் சிதறாமல் கவனித்து வரும் விஜய், மீண்டும் தாணுவுக்கே கால்ஷீட் கொடுத்தால் என்ன என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதை வெளிப்படையாகவே தாணுவுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கபாலி ரிலீஸ் ஆன சில தினங்களிலேயே மீண்டும் விஜய்யுடன் இணையும் அந்த நல்ல செய்தியை நாட்டுக்கு அறிவிப்பார் தாணு என்கிறது கோடம்பாக்கத்தின் சிறப்பு தகவல்கள்.

ஹ்ம்… எந்த டைரக்டருக்கு கொடுத்து வச்சிருக்கோ?

1 Comment
  1. Vijay says

    Dei ananthan, Vijay ketuthan Dhanu produce pannanum nu avasiyam illai.. Theri release appavey soonaru vijay ah vachu 10 movie kuda produce panna ready nu.. Ennamo vijay ketu Dhanu accept pana mathiri build up thara ne.. apuram ajith vijay nu order solratha stop pannu,. Star value enna market value enna yaruku evlo nu ellam engaluku theiryum.. thiramai illatha ajith ah vijay ku mundai name solrathuku pathil vera velai seiyalam ne.. ithuku peru ethchaaaaa

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரொம்ப நாள் கழிச்சு தனுஷ் சார்ட்ட பேசுறேன்! சிவகார்த்திகேயன் உருக்கம்!

‘சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை’. காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த இந்த தத்துவத்தை ஹார்ப்பிக் போட்டு கழுவி வைத்தார்கள் தனுஷ், சிவகார்த்திகேயன்,...

Close