நார் வச்சு பூவ கட்றதுக்குள்ள நரம்ப வச்சு உசுர கட்டிடுவாங்க போலிருக்கே?
படமே ஓடாவிட்டாலும் படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நடிகர்களுக்கு எதிராக ஏதாவது ஸ்பெஷல் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டால்தான் உண்டு போலிருக்கிறது. ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும், கணக்கெழுதும் பேப்பர்தான் கை கண்ட பலன் என்கிற அளவுக்கு நொந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்த நேரத்தில்தான் இப்படியொரு அதிர்ச்சியை தருகிறார்கள் நடிகர்கள். டாப் ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் விஜய் சேதுபதியும், ‘நல்லாதான் இருந்தாரு. இப்ப கெட்டுப்போயிட்டாப்ல…’ என்று புலம்ப விடுகிறாராம் தயாரிப்பாளர்களை.
அண்மையில் இவரிடம் கதை சொல்லிவிட்டு வந்தார் ஒரு இயக்குனர். அவருடன் தயாரிப்பாளரும் வந்திருந்தார். மூன்றரை கோடி சம்பளம் என்று சொல்லியனுப்பினாராம் விஜய்சேதுபதி. போனவர்கள் திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நடுவில் விஜய்சேதுபதி நடித்த படம் எதுவும் ரிலீசாகவும் இல்லை. ஆனால் இந்த முறை அட்வான்ஸோடு வந்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்தாராம் அவர். எப்படி? ‘சம்பளம் திடீர்னு (?) அதிகமாயிருச்சு. இப்போ அஞ்சு’ என்றாராம். இட் மீன்ஸ் கோடியில்!
நார் வச்சு பூவ கட்றதுக்குள்ள நரம்ப வச்சு உசுர கட்டிடுவாங்க போலிருக்கே?