அடுத்தவர் தலையில் மிளகாய்! விக்ரமின் புது ரூட்!

தன் வாரிசை களமிறக்க நினைக்கும் பெரும்பாலான ஹீரோக்களும், இயக்குனர்களும் சொந்தக் காசை இறைப்பதுதான் வழக்கம். விஜய், சிம்பு, தனுஷ், விஷால், உதயநிதி என்று நீளும் இப்பட்டியலில் ஜீவா, சிபிராஜ் போன்ற ஆவரேஜ் ஹீரோக்களும் இருக்கிறார்கள்.

ஆனால் விக்ரம் கெட்டியாச்சே? தன் மகனை யார் தலையிலாவது கட்டுவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து காத்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடம் “என் பையனை வச்சு படம் எடுங்க” என்று கேட்டுப் பார்த்தும் நோ ரெஸ்பான்ஸ். விக்ரமின் வலைக்குள் இருந்த ஏ.ஆர்.முருகதாசும் நழுவினார். எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். “பையனை ஃபிரியா தர்றேன். படத்தை நீங்களே தயாரிச்சு எடுங்க” என்ற விக்ரமின் தாராள(?) கண்டிஷன்தான்!

பேக்கரிய நான் வச்சுக்குறேன். அக்காள நீ வச்சுக்க என்கிற வியத்தகு வியாபாரத்திற்கு உருப்படியாக ஒருவரும் சிக்கவில்லை.

இந்தநிலையில்தான் தெலுங்கில் ஏராளமான படங்களை தயாரித்த வெயிட்டான நிறுவனம் ஒன்று சிக்கியது விக்ரம் பார்வையில். அவர்களும் விக்ரமின் மகன் துருவ்வை வைத்து படம் எடுக்க தயாராக இருக்க…. கொத்துடா கோவாலு என்று ஒரே கொத்தாக கொத்திவிட்டார். முதலில் அட்வான்ஸ் பெற்று மகனை கமிட் ஆக்கிக் கொண்ட விக்ரம், இனிமேல்தான் டைரக்டரையே முடிவு பண்ணப் போகிறாராம்.

முதல்ல ரயில்ல உட்கார இடம் வேணும். அதை கெட்டியா பிடிச்சுகிட்டா ஜன்னலுக்கு வெளியே கைய விட்டுக் கூட தண்ணீர் பாட்டில் வாங்கிக்கலாம். எப்படி நம்ம சீயானின் ஐடியா?

https://youtu.be/KBYFZzQZxoI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘அர்ஜூன்ரெட்டி ’ என்கிற அப்பாடக்கரும் ‘அந்த ஏழு நாட்களும் ’ -முருகன் மந்திரம்

Close