விக்ரம்தான் செய்வாரா? என்னால முடியாதா? ஐ யை மிஞ்ச தயாராகும் சூர்யா!
ஐ படத்தில் வரும் விக்ரமின் கெட்டப் பல முன்னணி ஹீரோக்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. ‘ஒரேயடியா பேரை தட்டிட்டு போயிருவாரோ?’ என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது சீயான் குறித்து. ஒரு காலத்தில் உடம்பை ஏற்றுவதும் இறக்குவதும் கமலின் வேலையாக இருந்தது. இப்போது அதை விக்ரம் எடுத்துக் கொண்டார். இப்படி உருண்டு புரண்டு உயிரை நசுக்கி நடிக்காவிட்டால், ஃபேஸ்புக், ட்விட்டர் ஏரியாவில் 144 போடுகிற அளவுக்கு ரகளைகள் நடக்கும். மானம் கப்பலேறும் என்பதெல்லாம் புதிய கவலையாக வந்து சேர்ந்திருக்கிறது இந்த முன்னணி நடிகர்களுக்கு.
இந்த நேரத்தில்தான் சினிமாவுக்காக உடலை இளைப்பதும், கடுமையாக போராடி சிக்ஸ் பேக்கெல்லாம் வைத்துக் கொள்பவருமான சூர்யாவுக்கும் விக்ரம் வியாதி வந்திருக்கிறது. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மாஸ் படத்தில் ஐ படத்தில் வரும் விக்ரம் கேரக்டர் போல ஒரு கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்களாம். இதற்காக ஹாலிவுட் மேக்கப் மேன்களின் உதவியோடு மாஸ்க், மற்றும் இன்னபிற மேக்கப் ஐட்டங்கள் வரப்போகிறதாம்.
இடுப்பளவு நீண்ட முடியுடன் படத்தில் ஆவி கெட்டப்பில் தோன்றப் போகிறார் சூர்யா. இதற்காக மீண்டும் தன்னை வருத்த ஆரம்பித்திருக்கிறாராம் அவர். படத்தில் இரண்டு கெட்டப் சூர்யாவுக்கு என்றும் அதில் ஒன்றுதான் இந்த பேய் கெட்டப் என்றும் தனியாக வேறு விளக்க வேண்டுமாக்கும்?