விஜய்சேதுபதி, விதார்த்தோட சேர்ந்து…. என்ன செய்வாராம் விமல்?
சொந்தப்படம் எடுக்கப்போறேன்னு கிளம்புற அவ்வளவு ஹீரோக்களும், ஹைவேஸ்ல ஹெல்மெட் போடாம டூ வீலர் ஓட்டுறளவுக்கு ஆபத்து இருக்குங்கறதை புரிஞ்சுக்க சில நாட்கள் பிடிக்கும். அல்லது சில மாதங்கள் பிடிக்கும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ‘எனக்கெதுங்குங்க அந்த ஆசையெல்லாம்?’ என்று ஜகா வாங்க ஆரம்பித்திருக்கிறார் விமல். வேறொன்றுமில்லை, விமலின் உள்ளுணர்வு அப்படி.
நான், விஜய் சேதுபதி, விதார்த் மூணு பேரும் சொந்தமா சினிமா கம்பெனி தொடங்கப் போறதா ரொம்ப பேரு கிளப்பிவிடுறாங்க. சத்தியமா நம்பாதீங்க. அந்த லிஸ்ட்டில நான் இல்லே என்று எதிர்கால கிசுகிசுக்களுக்கும் கூட ஒரேயடியாக கேட் போட்டு விட்டார் விமல். மஞ்சப் பை, நீயெல்லாம் நல்லா வருவடா, ஒரு ஊர்ல ரெண்டு ராஜான்னு வரிசையா ரிலீஸ் இருக்கிறது விமலுக்கு. இப்பதான் கதை கேட்டு முடிவெடுக்கிற விஷயத்துல கொஞ்சம் தேறியிருக்கேன். இனி சறுக்கல் இருக்காது என்று நம்புகிற விமலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது.
எந்த சாயங்கால பார்ட்டிக்கும், சக்சஸ் பார்ட்டிகளுக்கும் போவதேயில்லை அவர். நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராதுங்க. போற இடத்துல எப்படி நடந்துக்கணும்னு கூட எனக்கு தெரியாது. போய் சங்கட படுறதை விட சும்மாவே இருக்கலாம். எனக்கு பேமிலிதான் பார்ட்டி சந்தோஷமெல்லாம் என்றார்.
படத்துலதான் விமல் மஞ்சப்பை. நேர்ல, கெட்டியான பொட்டியாக்கும்.