கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? விஷால்- லட்சுமிமேனன் பிரிவு?
உணவகங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் உண்டு ‘காம்போ’ ஸ்பெஷல்! ஒரு படத்தில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதே ஜோடியை திரும்ப திரும்ப நடிக்க வைப்பார்கள். அப்படியொரு காம்போ கலக்கலில் விஷாலையும் சிக்க வைக்க நடந்த முயற்சியை அவரே தோற்கடித்திருக்கிறார். தனக்கு ஜோடியாக மீண்டும் லட்சுமிமேனன் நடிக்க விரும்பிய போதும், சே..சே…வேண்டாம் என்றாராம்.
கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? இதென்ன கொடுமை? அதன் விவரம் வருமாறு- பாண்டியநாடு படத்தில்தான் இவ்விரு ஜோடிகளும் முதன் முறையாக சேர்ந்தார்கள். அதே படத்தை இயக்கிய சுசீந்திரன் மீண்டும் விஷாலை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க அழைக்கலாம் என்கிற டிஸ்கஷன் போதுதான் இந்த லட்சுமிமேனன் மேட்டரை சொல்லியிருக்கிறார் அவர். சொல்லி முடிப்பதற்குள் ‘சே..சே… ’ என்றாராம் விஷால்.
சமந்தாவை கேளுங்க என்று விஷால் கூறியதை பக்குவமாக ஏற்றுக் கொண்ட சுசீந்திரனுக்கு லட்சுமியை ஏன் வேணாம்னு சொன்னார் என்ற கேள்விக்குதான் இந்த நிமிடம் வரைக்கும் விடையில்லை. கான்கிரீட் பலமா இருந்தா கட்டிடத்துல ஏன் விரிசல் விழுது? லட்சுமிமேனனிடம்தான் கேட்கணும்…