முதலமைச்சர் சீட்டு வேணுமா? பிரபல ஹீரோவுக்கு கவுண்டர் குறுக்கு வழி!

இன்று நகைச்சுவை பேராசான் கவுண்டமணி பிறந்த நாளாம். நான் என்ன பெரியாரா? அண்ணாவா? போய் வேலயா பாருடா வௌக்கெண்ண தலையா… என்று இந்நேரம் அவர் எத்தனை தலைகளுக்கு அபிஷேகம் பண்ணியிருப்பாரோ தெரியாது. ஆனால் கவுண்டரின் பிறந்த நாள் அவரது வெறிபிடித்த ரசிகர்களுக்கும், மீம்ஸ் மன்னர்களுக்கும் சிறப்பான நாள்தான். இந்த நல்ல நாளில் கவுண்டர் அடித்த கமென்ட் ஒன்றை இப்போது சொன்னால் செம பொருத்தமாக இருக்கும்.

ஒரு பெரிய இயக்குனர், கம் நடிகர் (?) தன் மகனை சி.எம்.நாற்காலியில் உட்கார வைத்தே தீருவது என்று நாக்கில் ஜலம் வடிய திரிந்த கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இன்னும் ஐந்து வருடத்திற்கு வீட்டு அடுப்பங்கரையில் நின்று கூட அது பற்றி யோசிக்க முடியாது. அது வேறு விஷயம். ஆனால் அவர் தனக்கு நெருக்கமான ஒரு ஹீரோவிடம், தன் ஆசையை பேச்சு வாக்கில் சொல்லியிருந்தாராம். காரில் வீட்டுக்கு போய் கொண்டிருந்த அந்த ஹீரோ, கவுண்டருக்கு நெருங்கிய நண்பர். பல படங்களில் ஒன்றாக நடித்தவரும் கூட. விஷயத்தை கவுண்டர் காதில் போட்டால், அங்கிருந்து செமத்தியாக ஒரு பதில் வரும். அதை வச்சு ஆறு நாள் நினைச்சு நினைச்சு சிரிக்கலாம் என்று நினைத்திருக்கிறார். கவுண்டருக்கு போன் போட்டு, “அண்ணே… அவருக்கு தன் பையனை ஒரு நாளாவது முதலமைச்சர் நாற்காலியில உட்கார வைக்கணும்னு ஆசையாம்ணே. எங்கிட்ட சொன்னாரு” என்று சொல்ல, கவுண்டர் சொன்ன பதில்தான் ஆஹா ஓஹோ.

“அதுக்கென்ன… தாராளமா உட்கார சொல்லு. செக்ரட்ரியேட் ராத்திரியில திறந்துதான் இருக்கும். அங்கு ராத்திரி காவலுக்கு நிற்கிற செக்யூரிடிகிட்ட ரெண்டாயிரம் கொடுத்தா அஞ்சு நிமிஷம் அந்த நாற்காலியில உட்கார வச்சுருவான். ஒரு போட்டோவை எடுத்துகிட்டு கிளம்பிற வேண்டியதுதானே” என்றாராம்.

அதாண்டா கவுண்டர்!

பின்குறிப்பு- அந்த இயக்குனர் கம் நடிகர் யாரு? முதலமைச்சர் ஆக ஆசைப்பட்ட ஹீரோ யாரு என்றெல்லாம் சந்தேகம் கேட்பவர்கள் இந்த நாட்டில் இருக்கவே லாயக்கற்றவர்கள் என்பதால்… என்பதால்… என்பதால்… ஹ்ம். அதேதான். நாட்டை விட்டே ஓடிப்போயிருங்க!

2 Comments
  1. Roja says

    Vijay/SAC

  2. shan says

    mr andhanan. unaku yennda mairu. veen wela.eppa paru ajith bathroom ponaru. mobile a charge panraru endu ajith purananam padura…. seriously you ajith rasigan. no problem.adhu your choice.you tamilcinema.comla irukum podhula irundhu now varaikum watch panren.all newsa podu oluga podu.illaty this web site a AJITH JALRA.COMnu change pannu.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தாறுமாறு தக்காளி சோறு… என் ஆள பாரு பப்பாளி தோலு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்...

Close