என்னை விஜய்ன்னு நினைச்சுட்டாரே… அட்லீயால் அலறிய ஹீரோ!
எல்லாரையும் தெறிக்க விடுவதுதான் அட்லீயின் ஸ்டைல் போலிருக்கிறது. தாணு அழைத்தால், “சொல்லுங்க தயாரிப்பாளரே…” என்று ஓடோடி வருவாராம் பா.ரஞ்சித். அதுவே அட்லீ விஷயத்தில் நேர்மார். “ஆபிஸ்லதான் இருக்கேன். வாங்களேன்” என்பாராம். ரெண்டு இட்லீக்காக முருகன் இட்லி கடையையே விலை பேசுகிற அளவுக்கு, குணத்தாலும் பணத்தாலும் மிதிமிஞ்சி இருக்கும் அட்லீ, தனது ஆவேச ஆசையால் ஒரு ஹீரோவை ஓடவிட்ட கதை இது.
சாம்பார் கரண்டியை நெய் ஜாடிக்குள் போட்ட மாதிரி, விஜய் படத்திற்கு வாங்குகிற தாராள சம்பளத்தை நிவின் பாலி படத்திற்கும் எதிர்பார்த்தால் நடக்குமா? மலையாளத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் நிவின் பாலி தமிழ் ஹீரோக்கள் போல பல கோடி சம்பளம் வாங்குகிற ஆள் இல்லை. தெறி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யின் கருணை பார்வையை பெற்றிருக்கும் அட்லீ, அந்த படத்தை இயக்குவதற்கு முன் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கிவிடலாம் என்று கணக்குப் போட்டார்.
இந்த பட வேலைகளில் அவர் இறங்குவதற்கு முன்னாலேயே செய்திகள் வெளியே கசிந்துவிட்டது. இருந்தாலும் அட்லீ அட்வான்ஸ் வாங்கிய பின்புதானே முறைப்படி அறிவிக்க முடியும்? தயாரிப்பாளரிடம் இவர் விஜய் படத்தை இயக்கிய போது வாங்கிய சம்பளத்தை கேட்க, அவர் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டு பார்த்தாராம். இந்த படத்திற்கு இவ்ளோ சம்பளம் தாங்காது என்று அவரது மூளைக்குள் மின்னல் அடிக்க, விஷயத்தை நிவின் பாலி காதுக்குக் கொண்டு சென்றாராம்.
தன்னை இயக்கப் போகும் டைரக்டர், தன்னை விட பல மடங்கு அதிகம் சம்பளம் கேட்கிறார் என்பதை அறிந்த நிவின்பாலிக்கு மூச்சு பேச்சே காலி என்கிறது இன்டஸ்ட்ரி. கடைசி நிலவரப்படி, மேற்படி படத்தை கைகழுவி விட்டார்களாம் மொத்த பேரும்!
To listen audio click below ;-