யுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல! -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்!
யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே மற்றொரு மனைவியாக கட்டிக் கொண்டு வாழ்ந்தார் அவர். பொறுத்து பொறுத்து பார்த்த சுஜயா பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் இருக்கிறார் அவர்.
அதற்கப்புறம் 2011 ல் ஷில்பா. இதுவும் காதல் திருமணம்தான். சுஜயாவுக்கு இருந்த பொறுமை கூட ஷில்பாவிடம் இல்லை. வெகு சீக்கிரத்தில் பிய்த்துக் கொண்டார். அதற்கப்புறம் காலம் வெறுமையையும் வலியையும் மட்டுமே தந்தது யுவனுக்கு. படங்களும் குறைந்தன. பிசியாக இருந்த யுவனுக்கு உலகம் வெறிச்சோடிப் போனது. தனிமையில் அவர் இருந்தபோதுதான் குர்ஆன் அறிமுகம் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார். ஐந்து வேளை தொழுவது. அல்லாவையே நினைப்பது என்று வாழ்க்கை ஆன்மீகத்திற்குள் அடைபட்டு போனது.
இந்த நிலையில்தான் இன்னொரு இனிய திருப்பம்.
மனசு எப்போதும் வட்டிக்கடைக்காரனின் புரொ நோட் மாதிரி. கடனை அடைக்கவே விடாது. மீண்டும் காதல் வராவிட்டாலும், தனக்கென வாழ்வதற்கு ஒரு பெண் வேண்டும் என்று ஆசைப்பட்டார் யுவன். காதல் தந்த வலிகள் அவருக்குள் தழும்பாக இருந்ததால், இந்த முறை காதல் வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டார். அதுமட்டுமல்ல, காதல் என்பது தேடிப்போய் வலை வீசுவதில் இல்லை என்பதும் அவருக்கு தெரியும். தனக்கு தெரிந்த மலேசியப் பெண் தோழி ஒருவரிடம் ‘எனக்கும் ஒரு பெண் பாருங்களேன்’ என்றார். தோழியின் முக்கிய தொழிலே விவிஐபிகளுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் மேட்ரிமோனியல் செய்வதுதான். அதுவும் முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும்.
யுவனின் ஆசையை உடனே நிறைவேற்றும் பொருட்டு பெண் தேடத் துவங்கினார். அப்போதுதான் கீழக்கரையிலிருக்கும் ஒரு பணக்கார குடும்பம், இஸ்லாத்தின் நெறிபாடுகளை துல்லியமாக கடைபிடிக்கும் குடும்பம் ஒன்றும் மாப்பிள்ளை கேட்டு யுவனின் மலேசிய தோழியை அணுகினார்கள். தனது மகள் ஜஃப்ரோனுக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். உடனே யுவன் என்ற அப்துல் ஹாலிக் பற்றி சொல்ல ஆரம்பித்தார் தோழி. ஏற்கனவே யுவனை பற்றி நன்கு அறிந்திருந்த மணப்பெண்ணின் குடும்பம் யுவனை நேரில் வரவழைத்து பேசியது. அதற்கப்புறம் நடந்ததுதான் உங்களுக்கு தெரியுமே?
துபாயில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார் ஜஃப்ரோன்னிசா. இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். பேச பேச இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. சந்தோஷமாக இருக்கிறது ஜஃப்ரோனின் குடும்பம். அவரது சித்தி தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த நல்ல செய்தியை வாட்ஸ் அப் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த ஆடியோ பதிவை இங்கு விசேஷமாக வெளியிடுவதில் பெருமைகொள்கிறது நியூதமிழ்சினிமா.காம்.
ஆடியோவை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்
-ஆர்.எஸ்.அந்தணன்
ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம் , அவுனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம்.. அலிபாய்