பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு…’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு. ஆனாலும், தேவைப்படுகிற இடங்களிலும் தேவைப்படுகிற படங்களிலும் மட்டுமே அவர் இந்த பிரெஞ்ச் கிஸ்சை பயன்படுத்துவார்.

தற்போது கமல் நடிக்கும் உத்தமவில்லன் எப்படி? ‘அசல் நெய்யில் செய்யப்பட்ட பலகாரம்’தான் என்கிறது சினிமாவுலகம். அதுவும் படத்திற்கு யு சான்றிதழ் அளித்திருக்கும் சென்சார் அமைப்பு இன்னும் சற்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில், உத்தமவில்லன் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கே போன் அடித்துவிட்டது. அந்த அமைப்பின் தலைவர் பக்கிரிசாமி லிங்குசாமிக்கு போன் அடித்தாராம்.

விஸ்வரூபம் படம் எவ்வளவு விறுவிறுப்பாக இருந்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் விறுவிறுப்புடன் படம் இருப்பதுடன் எங்கும் ஆபாசம் தென்படாமல் குடும்பத்தோடு எல்லாரும் ரசிப்பது போலிருக்கிறது என்று பாராட்டினாராம்.

முதல் மணி சப்தம் கணீர் என்று ஒலித்ததில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் செம ஹேப்பி…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
A.R.Rahman on OK Kanmani

https://youtu.be/lmDPlNxpTl4

Close