சீரியலில் நடிக்கப் போகாதே தேவயானியை கட்டுப்படுத்துகிறாரா ராஜகுமாரன்?

‘சினிமாவில் கருத்தொருமித்த தம்பதிகளை வரிசைப்படுத்தவும்’ என்றால் யாரும் யோசிக்காமலே டிக் அடிக்கக் கூடிய பெயர் தேவானி- ராஜகுமாரன் தம்பதியின் பெயராகதான் இருக்கும். எல்லா வகையிலும் ராஜகுமாரனை ராஜாதி ராஜா குமாரனாக்கிய பெருமை தேவானியையே சாரும். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த காதல் அவர்களுடையது. நிஜமான அன்பிருந்தால், ரோமாபுரி ராணியை கூட, சாதா பூரி மாஸ்டர் மடக்கிவிட முடியும் என்பதற்கு இவர்கள் காதலே சாட்சி. அப்படியெல்லாம் உலகத்தை அதிசயிக்க வைத்த இவர்களின் காதலில் இப்போது பொட்டு சைசுக்கு ஒரு லொட்டு என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

என்னவாம்?

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த தேவயானி, திருமணத்திற்கு பிறகு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்பு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் ஒரு லட்சம் சம்பளம். மரியாதையான அப்ரோச் என்று தேவயானியை இங்கேயும் தங்க தாம்பாளத்தில்தான் தாங்கியது சின்னத்திரை. திடீரென சின்னத்திரையிலிருந்தும் விலகிய தேவயானி இப்போது யார் போனாலும், ‘நடிக்கறதில்லீங்க’ என்கிறாராம். ஏன்? எல்லாம் ராஜகுமாரனின் பிரஷர்தான் என்கிறார்கள்.

இனிமேல் நடிக்கப் போகக் கூடாது. வீட்டிலேயே இரு என்கிறாராம். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எப்போதெல்லாம் தேவயானி கோபப்படுகிறாரோ, அப்போதெல்லாம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு கிளம்பிவிடுகிறாராம் ராஜகுமாரன். பல நாட்கள் அவரில்லாமல் போகும்போது ஆட்டோமேடிக்காக கோபம் தணிந்து சமாதானம் ஆகிவிடுகிறாராம் தேவயானி. கோவிலுக்கு போயிருந்தேன். இந்த திருநீறு என்று தேவயானி நெற்றியில் ராஜகுமாரன் விபூதி பூசியவுடனே அவரது கோபம் தணிந்துவிடுகிறதாம்.

இப்படி விபூதி மந்திரம் போட்டே அவரை சின்னத்திரையிலும் நடிக்க விடாமல் வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார் என்று ராஜகுமாரன் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கிறது சின்னத்திரை வட்டாரம். நாளொன்றுக்கு மூன்று லட்சம் வரைக்கும் பேமென்ட் கொடுக்க தயாராக இருக்கும் இந்த தொழிலை ஏன் புறக்கணிக்கிறார் ராஜகுமாரன் என்பதுதான் புரியாத புதிர்.

Read previous post:
வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள் / கவிதைத் தொகுப்பு / ஆசிரியர்:  சந்திரா தங்கராஜ் வெளியீடு: பட்டாம்பூச்சி பதிப்பகம்

நினைவின் அறைகளிலும் அனுபவங்களின் வீதிகளிலும் இருளின் கருப்பு வண்ணத்திற்குள்ளும் சிதறிக் கிடக்கிற வார்த்தைகளை பொறுக்கி எடுத்து, கோர்த்து, மடியில் பரப்பி விளையாடுகிற சந்திராவின் விரல்களுக்குள் தீராத பேரன்பும்,...

Close