பாராட்டும் ஹாரிஸ் ஜெயராஜ்! இசையுலகில் ஒரு வளர்சிதை மாற்றம்!

ஒரு இசையமைப்பாளர் இன்னொரு இசையமைப்பாளரை பாராட்டுவதென்பது, மு.க.ஸ்டாலின் அன்புமணிக்கு கல்யாண இன்விடேஷன் கொடுப்பதை விடவும் அரிதானது. அதே நேரம் சிறப்பானதும் கூட. ஆனால் இசையுலகில் அப்படியெல்லாம் நடப்பதேயில்லை என்பதுதான் வருத்தம். ஆஸ்கர் வாங்கிய ரஹ்மானை ஆறேழு நாள் கழித்து வேறு வழியில்லாமல் பாராட்டினார் அந்த பெரிய்ய்ய்ய்ய்ய இசையமைப்பாளர். இப்படிதான் இருக்கும் இசையுலகம் என்று வருந்தியவர்கள் நிறைய பேர் உண்டு. வெகு விரைவில் அந்த வருத்தத்திற்கு வேலையிருக்காது என்கிற அளவுக்கு இளம் இசையமைப்பாளர்களுக்குள் வளர்சிதை மாற்றம்!

ஜி.வி.பிரகாஷ் இசையில் அனிருத் பாடுவதும், அனிருத் இசையில் யுவன் சங்கர்ராஜா பாடுவதுமாக கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சமத்துவ பொங்கல்! அப்படியொரு ருசியான பொங்கல்தான் இந்த விஷயமும். தமிழ் திரையுலகத்தில் வெகு வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர் தாஜ்நூர், தன் சிறப்பான மெட்டுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவர் பா.விஜய் நடித்து இயக்கும் ‘ஸ்டாபெர்ரி’ என்ற படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதில் இசையமைப்பாளர் டி.இமானும், பிரபல ஹீரோ சித்தார்த்தும் பாடியிருக்கிறார்கள்.

இந்த பாடலை அண்மையில் கேட்டு அசந்து போன இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், அந்த யூனிட்டையும், இசையமைப்பாளர் தாஜ்நூரையும் பாராட்டி ட்விட் செய்திருக்கிறார். அந்த ட்விட் கீழே-

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி அனுப்புன அந்த சொப்பன சுந்தரி இப்ப யாருகிட்ட இருக்கா?

கூரையில சோறு போட்டா ஆயிரம் காக்கா என்கிற பழமொழிக்கெல்லாம் இப்போதுதான் அர்த்தம் தெரியவருகிறது. ரஜினியிடம் பெறப்பட்ட பனிரெண்டரை கோடியை கூரையில் எறிந்துவிட்டு ஆயிரம் காக்காய்கள் அதை சுற்றி...

Close