நயன்தாரா ஜெயிக்கிறார்னா சும்மாயில்ல!

ஹீரோ ஹீரோயின்களுக்கு கதை சொல்லுதல் என்பதே பெரிய அனுபவமாக இருக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும். அதுவும் ஆரம்ப நிலையிலிருக்கும் இயக்குனர்கள் என்றால் ஆறிப்போன தோசையை ஊற வச்சு ஊட்டுனாலும் உள்ளுக்குள் இறங்கலையே என்பது போலவே டீல் பண்ணுவார்கள். தப்பி தவறி ஒரு சிலர்தான் கதைக்கும், புதிய இயக்குனர்களுக்கும் முழு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி காதை நீட்டுவார்கள். ‘பத்து நிமிஷத்துல கதை சொல்லுங்க. புடிச்சுருந்தா கன்ட்டினியூ’ என்று உட்காரும் ஹீரோக்கள் இங்கு கொள்ளை பேர் இருக்கிறார்கள். அந்த திமிருக்காகவே குப்புறடிச்சும் விழுகிறார்கள் மார்க்கெட்டில்.

“இரண்டரை மணி நேரம் ஒதுக்குங்க. நான் முழுசா சொல்லணும். ஷாட் பை ஷாட் சொல்லணும்” என்று கேட்டாலும், ஒரு சில ஹீரோக்கள்தான் “ம்…’ என்பார்கள். திருநாள் கதையை ஜீவாவுக்கு அப்படிதான் சொன்னாராம் டைரக்டர் ராம்நாத். “இந்த இடத்துல பேக்ரவுண்ட் மியூசிக் வராது சார். இந்த இடத்துல ஒரு பல்ப் பியூஸ் ஆகியிருக்கும் சார்” என்கிற அளவுக்கு டீட்டெயிலாக அவர் சொல்லி முடிக்க, உடனே ஜீவா வாயிலிருந்து நல்ல செய்தி. “ பண்றோம் சார்! ”

அதற்கப்புறம் நயன்தாராவிடம் கதை சொல்லப் போயிருக்கிறார் ராம்நாத். அங்கேயும், எனக்கு ரெண்டரை மணி நேரம் வேணுங்க என்றாராம். தயாராகிவிட்டார் நயன். கேட்டு முடித்ததுமே, “கண்டிப்பா பண்றோம். ஆக வேண்டிய வேலையை பாருங்க’ என்றாராம். ஹீரோக்கள் இப்படி நேரம் ஒதுக்கி கதை கேட்பது இயற்கை. அவசியம். ஆனால் ஹீரோயின்கள் இப்படியெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. “என் போர்ஷனை மட்டும் சொல்லுங்க. ரொம்ப நேரமா என் பாமரேனியன் குலைச்சுகிட்டேயிருக்கு. நான் அதுகூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்” என்பார்கள் கூச்சமேயில்லாமல்.

கதை கேட்கும்போது மட்டுமல்ல, திருநாள் படத்தின் மேக்கிங் வீடியோ பார்க்கும்போது ஒரு விஷயம் புரிந்தது. டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை தலையாட்டி தலையாட்டி கேட்டுக் கொண்டேயிருக்கிறார் நயன்தாரா. அதையே ஷாட்டில் செய்தும் கொடுக்கிறார்.

இப்ப புரியுதா… நயன்தாராவின் வெற்றி ரகசியம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தோழா விமர்சனம்

தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு...

Close