எண்ட குருவாயூரப்பா…! காதல் சந்தியாவுக்கு கால்கட்டு!
சென்னையில் மழைக் கொட்டிக் கொண்டிருக்க, காதல் சந்தியாவின் கல்யாணம் குருவாயூரில் மிக சிம்பிளாக நடந்து முடிந்துவிட்டது. மாப்பிள்ளை வெங்கட் சந்திரசேகரனுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லையாம். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஒரு நடிகைக்கு கல்யாணம் என்றால் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பாவது அந்த தகவல் கசிந்து பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களால் கோலம் போடப்படும். ஆனால் சந்தியாவின் திருமணம், சொல்லாமல் கொள்ளாமல் சடக்கென்று நிறைவேறியிருக்கிறது. காரணம்… வெள்ளம் மழைதான். வேறென்ன?
திருமணத்திற்கு முதல்நாள் வரைக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எப்படியோ? கடந்த சனிக்கிழமைதான் இவரை தொடர்பு கொள்ள முடிந்ததாம். அவசரம் அவசரமாக குருவாயூர் கோவிலுக்கு திருமணத்தை ஷிப்ட் செய்திருக்கிறார்கள். எண்ட குருவாயூரப்பன் அருளால் இனிதே நிறைவேறியது திருமணம். வெள்ளம் அடங்கி சென்னை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின் இங்கே ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறது ஜோடி.
பிள்ளையாண்டானுக்கு நிறைய சினிமா ஸ்டார்சை நேர்ல பார்க்கணும்னு ஆசை இருக்குமோல்யோ?