ஏன் உம்முன்னு இருக்கேன்? லட்சுமிமேனன் விவகாரமான பதில்!

சில ஹீரோக்கள் சிரிக்கவே மாட்டார்கள். எதையோ பறி கொடுத்தது போலவே இருப்பார்கள். இப்போது ஹீரோயின்களுக்கும் அந்த வியாதி தொற்றிக் கொண்டது போலும். நடிகை லட்சுமிமேனன் முன்பு போலில்லை. கலகலப்பாக சிரிப்பதை முற்றிலும் குறைத்துவிட்டார். ஒரு பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தவரிடம், ஏன் எதையோ பறி கொடுத்தது போலவே இருக்கீங்க என்று கேள்வியே கேட்டுவிட்டார்கள் நிருபர்கள். நல்லவேளையாக சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

எனக்கு தமிழ் ஃபீல்டுல யாரும் பிரண்ட்ஸ் கிடையாது. மற்றவங்க மாதிரி பார்ட்டிக்கு போவதோ, ஊர் சுற்றுவதோ எனக்கு பிடிக்காது. ஊர்ல என்னோட படிச்ச ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அங்க வந்து பாருங்க என்னோட அரட்டைய. அப்புறம் இப்படியெல்லாம் கேட்க மாட்டீங்க என்றார்.

அவர் சொன்ன ‘மற்றவங்க’ யாரு? இப்படி வெளிப்படையா சொன்னா அவங்களுக்கு கோபம் வராதா? என்றெல்லாம் அவரை டென்ஷன் படுத்தாத பிரஸ், என்னவோ அகிம்சாவாதிகளாக இடத்தை காலி பண்ணியது. தப்பிச்சாரு லட்சுமிமேனன்!

Read previous post:
பிரபுவுக்கு எந்நேரமும் அதே நினைப்புதான்!

பிரபல ஜுவல்லரி நிறுவனம் ஒன்றுக்காக அல்லும் பகலும் உழைக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் பிரபு. எந்நேரமும் அந்த ஜுவல்லரி பற்றிய சிந்தனையே ஓடுகிறதாம் அவருக்குள். கடையே 17 ந்...

Close