சொத்துக்களை விற்றாவது ரஜினி முருகன் படத்தை ரிலீஸ் பண்ணுவேன்! லிங்குசாமி கம்பீரம்…

ஒரே நாளில் எவரெஸ்ட்டில் ஏற்றவும், மறுநாளே கார்ப்பரேஷன் குப்பை லாரியில் இறக்கவும் துணிந்த இடம் சினிமாதான். இங்கு பல பேரை பேப்பர் கப் போல கசக்கி எறிந்திருக்கிறது சினிமா வியாபாரம். இப்போது லிங்குசாமியை பேப்பர் கப் போல நினைத்து இறுக்குற மனிதர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் தனது இடது கையால் தள்ளிவிடுகிற தெம்பில் இருக்கிறார் லிங்குசாமி. இன்று சென்னையில் நடந்த ‘ரஜினி முருகன்’ பிரஸ்மீட்டில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் குப்புற கிடப்பவர்களை உசுப்பி எழ வைக்கிற நம்பிக்கை மந்திரம். பேச்சோடு பேச்சாக, ‘இந்த சினிமா இன்டஸ்ரியில் நிறைய உத்தம வில்லன்கள் இருப்பாங்க. அவங்களை இனம் கண்டுக்கலேன்னா நம்மளை காணாமல் அடிச்சுருவாங்க’ என்றெல்லாம் எச்சரித்தார் லிங்கு. (யாருங்க யாரு?)

நான் ரஜினி முருகன் யூனிட்ல வேலை பார்த்த உதவி இயக்குனர்கள்ல ஆரம்பிச்சு, சிவகார்த்தியேன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கேன். சம்பளம் வந்துச்சா, வரலையாங்கிற எந்த வருத்தமும் இல்லாம விட்டுக் கொடுத்து வேலை பார்த்திருக்காங்க. இந்த படத்தை ஆரம்பிக்கும் போதே, லிங்குசாமி நிலைமை சரியில்ல. இந்த படத்தை அவர் பேனர்ல பண்ணாதீங்கன்னு சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்காங்க. ஷுட்டிங் நடக்காதுன்னு சொன்னவங்களோட வார்த்தைகளை முறியடிச்சு இன்னைக்கு படத்தை முடிச்சுட்டோம். இப்போ ரிலீஸ் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க. அதையும் முறியடிப்போம்.

ரஜினி முருகன் இன்னொரு எம்ஜிஆர்னு சொன்னவங்களுக்கு சொல்றேன். சிவகார்த்திகேயனை நாங்க ரஜினி இடத்துல வைச்சு பார்க்கதான் ஆசைப்பட்டோம். ஆனால் நீங்க அதைவிட பெரிய இடத்தை கொடுக்க ஆசைப்படுறீங்க. சந்தோஷம். இந்த படம் திட்டமிட்டபடி சொன்ன தேதிக்கு வெளியாகும். என் சொத்துக்களை விற்றாவது இந்த படத்தை நான் ரிலீஸ் பண்ணுவேன். நான் கும்பகோணத்துலேயிருந்து கிளம்பி வரும்போது வெறுங்கையோடுதான் வந்தேன்.

இவனால் ஒரு ஸ்டில்லு கூட எடுக்க முடியாது. அவனை திரும்பி வந்திர சொல்லுங்கன்னு ஒரு ஜோசியர் சொல்லியிருந்தார். கண்ணீரோடு எங்க அண்ணன் இதை சொன்னப்போ நான் சொன்னேன். இன்னும் இரண்டு மாசத்துல அந்த ஜோசியருக்கே நான் இயக்குன படத்தை ஷோ போட்டு காட்றேன்னு. அந்த நம்பிக்கை இன்னும் எங்கிட்ட அப்படியே இருக்கு. ரஜினி முருகன் போஸ்டர்களையும், அது தர்ற பாசிட்டிவ் எனர்ஜியியையும் பார்க்கும் போது என் கஷ்டத்தையெல்லாம் அது தீர்த்து வைக்கும்னு நம்பிக்கை இருக்கு. அஜீத்தை வச்சு ஜி ங்கிற பிளாப் படத்தை கொடுத்த பிறகுதான் சண்டைக்கோழின்னு வெற்றிப்படத்தை பண்ணினேன்.

பீமாங்கிற தோல்விக்கு பிறகுதான் பையாங்கிற வெற்றிப்படத்தை எடுத்தேன். ஒவ்வொரு முறையும் சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டிதான் ஜெயிச்சுருக்கேன். நிச்சயம் ரஜினிமுருகன் விஷயத்துல எனக்கு ஏற்பட்ட சோதனையையும் கடந்து வெல்லுவேன் என்றார் லிங்குசாமி ஆவேசத்தோடு.

வெல்வீர்கள் லிங்கு!

2 Comments
  1. hari says

    Am an aspiring film maker struggling to get a break. Once when i went to lingusamy office, i have been disgraced by his assistant. I had a lot of anger on lingusamy for that incident. But the struggle he is going through now and the strength of positiveness he is showing makes me to respect him for his passion. Now i understood how much pain he must have gone through in his journey. Even though i don’t like him personally, it’s delight to watch a film maker winning the hurdles with the determination. All the best Lingusamy sir. You are a real ANJAAN.

  2. SIVAA says

    தலைவர் ரஜினியின் பெருந்தன்மை வேறு தமிழ் சினிமாவில் வேறு எவனுக்கும் வராது. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காப்பாத்துங்க… போலீஸ் கமிஷனரிடம் ‘ரோமியோ ஜுலியட்’ மனு

ஒரு படம் திரைக்கு வந்து அடுத்த ஷோ ஆரம்பிப்பதற்குள், ‘தம்பி... அமரர் ஊர்திக்கு போன் பண்ணு’ என்கிற அளவுக்கு ‘கொலகார’ ரசிகர்கள் பெருகி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக...

Close