காத்திருக்கும் மண்டையிடி! கரை சேர்வாரா பி.சி.ஸ்ரீராம்?
அண்மையில் நடந்த ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் வெற்றி பெற்று தலைவராகி விட்டார். அவரை நேசிக்கும், மதிக்கும் எல்லா நெஞ்சங்களுக்கும் இந்த வெற்றி இனிப்பூ! ஆனால் இந்த பொல்லாத நாற்காலிக்குள் அவர் கொள்ளாமல் கொள்வாரா? அல்லது அவருக்கு பெரும் தலைவலியாக இருக்குமா அந்த பதவி? ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் கண்களும் அவரையும் அவரது பொறுமையையும் மட்டுமே கணக்கில் கொண்டு இதை கவனித்து வருகிறது.
பொதுவாகவே பொறுப்புக்கு வருகிறவர்களுக்கு நாலாபுறத்திலிருந்தும் தொல்லைகள் சூழும். பி.சி.ஸ்ரீராமை பொறுத்தவரை இந்தியா முழுவதுமிருந்தும் இந்த தொல்லை வரும் போலிருக்கிறது. எப்படி?
இவர் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சிகா அமைப்பில் ஏற்பட்டிருக்கும் வம்பு வழக்குகள், சிக்கல் சிணுங்கல்கள் தொடர்பாக இந்தியா முழுக்க 197 வழக்குகள் இருக்கிறதாம். எல்லாவற்றையும் பொறுப்பில் இருப்பவரே கவனித்தாக வேண்டும். பிசி ஸ்ரீராம் போன்ற அமைதி விரும்பிகளுக்கு இந்த வழக்குகள் என்ன மாதிரியான எரிச்சலை ஏற்படுத்துமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!