சுருட்டி வச்சுட்டு சும்மாயிருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா… அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா… இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா? டைரக்டர் பேரரசு!

விஜய், அஜீத், விஜயகாந்த் என்று பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லி, அவர்களிடமிருந்து கால்ஷீட் வாங்கி படமும் எடுத்து அதில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்களை தாறுமாறாக ஹிட்டாக்குற அளவுக்கு விபரம் தெரிந்த பேரரசுக்கு அந்த ஹீரோக்களை தொடர்ந்து தக்க வைக்க தெரியலையே? ஆர்வத்தில் அவரே ஒரு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருந்தார். அதுவும் அஜீத் ஊரில் இல்லாத நேரத்தில் ஒரு போர்ஷனை எடுத்து ‘திருப்பதி’ படத்தில் சேர்த்து…! அதை அஜீத்தே அதற்கப்புறம்தான் பார்க்க நேர்ந்ததாம்.

அதையாவது மன்னித்துவிடலாம். படத்தின் ஹீரோவை விட, பெரிய ஃபைட் இவருக்கு. பொறுத்துக் கொள்வார்களா? சொல்லி வைத்தது மாதிரி, பேரரசுக்கு பெரிய ஹீரோக்கள் எல்லாரும் கூடி டாடா காட்டிவிட்டார்கள். அதற்கப்புறம் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது விஜய்யிடம் கதை சொல்வதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார். அவரும் நேரம் ஒதுக்குவதாக கூறியிருக்கிறாராம். இதற்கிடையில், சும்மாயிருக்க முடியாதில்லையா?

நடிகர் நந்தா நடித்து வரும் ஒரு படத்தை…?

இயக்குகிறாரா? ம்ஹுக்கும். அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றுகிறாராம். ஏழுமலை என்பவர்தான் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் விதத்திலும், சும்மாயிருக்கிற நேரத்தில் ஒரு படத்தை இயக்கிய அனுபவமாவது கிடைக்குமே என்கிற எண்ணத்திலும் மேற்படி படத்தில் இணை இயக்குனராக சேர்ந்துவிட்டார். இருந்தாலும், ‘டைட்டிலில் எனது பெயர் வேண்டாம். ஜஸ்ட் உதவிதான் இது’ என்று கூறியிருக்கிறாராம்.

இப்படி அணில் போல உதவி செய்ய போன இடத்திலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது. ஒரு காலத்தில் நட்சத்திர இயக்குனராக இருந்தவர் இன்று இணை இயக்குனராக இறங்கி வருவதற்கு யோசிக்காமல், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று நினைக்கிறாரே… அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாராம் நடிகர் நந்தா. ‘வாங்க… என் கால்ஷீட் இருக்கு’ என்று அழைத்திருக்கிறாராம்.

பூனைக்கு மியாவ்தான் துணை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ராஜா கேட்கிறாரு… தேடிக் கொடுங்க பார்க்கலாம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ராஜா, ஸ்டுடியோவில் இருப்பார். அவர் பாடல்கள் மட்டும் உலகம் முழுக்க காற்றில் பறந்து கொண்டிருக்கும். இப்படி ஸ்டுடியோவும், இசையுமாக...

Close