சினேகாவின் லவ்வுக்கு சீமான் பாராட்டு

இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’ என்கிறார்கள் சாதாரண பொதுமக்களே கூட! அந்தளவுக்கு அகில உலக நாட்டாமையாகிவிட்ட அவருக்கு, அவ்வப்போது நல்ல அழைப்புகளும் வருகிறது என்பதே ஆச்சர்யம்தான்.

ஒரு யுவதியின் பயணத்தில் கிராஸ் பண்ணுகிற இளைஞர்களையும், அந்த பெண்ணின் காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘சினேகாவின் காதலர்கள்’. இது நடிகை சினேகாவின் கதையாக கூட இருக்கலாம் என்று இந்த நிமிடம் வரை நம்பப்படுகிற கதையும் கூட! படத்தின் இயக்குனர் முத்துராமலிங்கன் சரளமான எழுத்துக்கு உத்தரவாதமான ஆள். நாலு வரி எழுதினால் கூட நாற்பது முறை ரசித்து படிக்க வைக்கிற எழுத்தாற்றல் உடையவர் என்பதால், சினேகாவுக்கும் அவரது காதல்களுக்கும் இளைஞர் வட்டத்தில் எக்கச்சக்க எஸ்பெக்ட்டேஷன்!

இந்த மாதம் 15 ந் தேதி அஞ்சான் வெளிவருகிற அதே நாளில் திரைக்கு வருகிறாள் சினேகா. ‘எவ்வ்…வ்ளோ தைரியம்பா?’ என்கிற அக்கம்பக்க ஆச்சர்யங்களை சர்வ சாதாரணமாக எதிர்கொள்ளும் முத்துராமலிங்கன் அழைப்பின் பேரில் நேற்று போர் பிரேம்ஸ் தியேட்டரில் சினேகாவின் காதலர்கள் படம் பார்க்க வந்திருந்தாராம் சீமான். அவர் வந்தது கூட விசேஷமில்லை, கூடவே தன் மனைவியையும் அழைத்து வந்திருந்தாராம். படம் முடிந்ததும் முத்துராமலிங்கனை அழைத்து கைகுலுக்கிய சீமான், ‘தம்பி… பிரமாதம்ப்பா’ என்றதுடன், வசனங்களின் அழகையும் ஆழத்தையும் பல நிமிடங்கள் சிலாகித்து புகழ்ந்தாராம்.

எழுதியவர் முத்துராமலிங்கனாச்சே! வள்ளலார் வேட்டியில என்னைக்கு அழுக்கு பட்டிருக்கு?

Read previous post:
கார்த்திக்கு என்னாச்சு? -டென்ஷன் சூர்யா

‘கார்த்தி உடல்நிலை என்னாச்சு?’ கோடம்பாக்கத்தில் திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளாக மாறியிருக்கிறது இந்த அக்கறை. அதற்கு காரணம் இல்லாமலில்லை! பிரஸ்சிடம், ‘அவனுக்கு ஒண்ணுமில்ல... நர்ஸ் டாக்டர்களை கலாய்ச்சுகிட்டு...

Close