டேய்… எவளை கேட்டுகிட்டு இப்படி பண்ணினே? புலி ஷுட்டிங்கில் ஸ்ரீதேவி அலறல்! கிடுகிடுத்துப்போன தொழிலாளி
‘புடவை முந்தானையில பூட்டி வச்சுக்க வேண்டியதுதானே? என்னத்துக்கு வெளியில கூட்டிட்டு வரணும்… வேதனைய மத்தவங்களுக்கு தரணும்?’ இப்படி கடும் கோபத்தோடு திட்டிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் மூக்கழகியும், எந்நாளும் இந்திய திரையுலகத்தின் பேரழகியுமான ஸ்ரீதேவியை. இந்த கொடூர முணுமுணுப்புக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் நடந்ததென்ன? கேள்விப்பட்டால் கிடுகிடுத்துப் போயிவிடுவீர்கள்.
புலி பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு மும்பைக்கே போய்விட்டார் ஸ்ரீதேவி. அவர் போன பின்பும் கூட அவரை பற்றி முணுமுணுக்கிறார்கள் இங்கே. ஏனென்றால் சூடு அப்படி! வேறொன்றுமில்லை… ஒரு நாள் படப்பிடிப்புக்கு தனது மகள் ஜான்வியை அழைத்துக் கொண்டு வந்திருந்தாராம். அவரை ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு தனது வேலைகளில் மூழ்கியிருந்த ஸ்ரீதேவியை ஒரு பிளாஷ் லைட் வந்து பெரும் குய்யோ முய்யோவாக்கிவிட்டது. ஜான்வியை யாரோ ஒரு புண்ணியவான் தனது செல்போனில் படம் எடுத்துவிட்டாராம். எடுத்தவர் அந்த யூனிட்டில் பணிபுரிந்த ஒரு சாதாரண தொழிலாளி.
எடுத்தவர் தொழிலாளியா, தொழில் முறை போட்டோ கிராப புலியா என்பது பிரச்சனையல்ல. தனது மகளை முன் அனுமதியில்லாமல் எடுத்துவிட்டாரே என்பதுதான் பிரச்சனை. ஷாட்டிலிருந்து அப்படியே எழுந்து ஓடிவந்த ஸ்ரீதேவி, தாட் பூட்டென்று ஆங்கிலத்திலும் இந்தியிலுமாக கத்த ஆரம்பித்துவிட்டாராம். ஒரு பூ ஒன்று புயலானதை அப்போதுதான் நேரில் பார்த்தார்களாம் அத்தனை பேரும். படமெடுத்த நபர், உயிருக்கே உலை விழுந்துருமோ என்கிற அச்சத்தில் அங்கிருந்து ஓடிவிட, ஐயோ பாவம்… அங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் சிக்கிக் கொண்டார்களாம். தரை லோக்கலுக்கு இறங்கிவிட்டாராம் ஸ்ரீதேவி.
கேரவேனில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த விஜய்யில் ஆரம்பித்து, படத்தயாரிப்பாளர் வரைக்கும் அத்தனை பேரும் ஸ்பாட்டில் ஆஜராகி அவருக்கு ஆறுதல் சொல்ல, சம்பந்தப்பட்டவன் வந்தால்தான் ஷுட்டிங்கே நடக்கும் என்று கூறிவிட்டாராம் ஸ்ரீதேவி. அப்புறம் எங்கோ ஒரு சந்துமுனையில் பதுங்கியிருந்த அந்த சந்தன வீரப்பனை கொண்டு வந்து ஸ்ரீதேவி முன்னால் நிறுத்தியிருக்கிறார்கள். பயபக்தியோடு செல்போனை ஒப்படைத்தாராம் அவர்.
இப்ப சொல்லுங்க… தங்க விக்ரகத்தை ஏன் அழைச்சுட்டு வரணும். தாறுமாறா விங்கிலீஷ்ல கத்தணும்?