பசங்க பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசு! ஆனால் வொர்த் அவ்ளோதான்!

படத்தை ஹிட்டாக்கிக் கொடுத்த டைரக்டர்களுக்கு கார் பரிசளிக்கிற கலாச்சாரம், நாலு வீலுக்கும் எலுமிச்சம் பழம் வைத்துப் போற்றப்பட வேண்டிய நல்ல விஷயம்தான். படம் கிடைத்து அதை ரிலீஸ் செய்வதற்குள் கோடம்பாக்கத்தில் கால் தேய நடந்த இயக்குனர்களில் பலருக்கு இந்த முதல் அனுபவம் வாய்க்காமலிருந்திருக்காது. ஹிட் என்ற செய்தி காதில் விழுந்தவுடனேயே, இந்தாங்க… என்று வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரோ, அல்லது அதற்கப்புறம் அட்வான்ஸ் கொடுக்கும் தயாரிப்பாளரோ கார் சாவியை நீட்டிய சமாச்சாரம் இப்போதும் தொடர்கிறது.

மிக சமீபத்தில் தயாரிப்பாளரின் பாராட்டுதல்களை பெற்றுக் கொண்டு கார் வாங்கிக் கொண்ட இயக்குனர் குக்கூ படத்தை இயக்கிய ராஜுமுருகன். இவருக்கு டஸ்டர் என்ற சொகுசு காரை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வழங்கி சந்தோஷப்பட்டது தயாரிப்பாளர் மனசு.

தற்போது பசங்க 2 படத்தின் ஹிட் செய்தி காதில் விழுந்தவுடன் இயக்குனர் பாண்டிராஜுக்கு ஒரு கார் வழங்கி சந்தோஷப்பட்டிருக்கிறார் சூர்யா. 2டி நிறுவனம் சார்பில் அவரே தயாரித்த இந்த படத்தால் கம்பெனிக்கும் பெருமை. சூர்யாவுக்கும் பெருமை. அதை நினைவில் கொண்டுதான் இந்த கார் பரிசு. ஆனால் அந்த கார் சொகுசு கார் வகையை சேர்ந்ததா என்றால் நஹி. நாலரை லட்சம் மதிப்புள்ள மாருதி சுசுகி என்கிறது தகவல்கள்.

தானம் கொடுத்த மாட்டை பல்லை புடிச்சு பார்க்குற மொமென்ட்டுன்னு வைங்களேன்! (நம்ம முணுமுணுப்புல மொளகாப் பொடிய தூவ…)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத்தின் தலைக்கு மேல் அரசியல் மேகம்! ரைட்டா? ராங்கா? புரியலையே?

ஆறே சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற விஜயகாந்த்தை, ‘விஷய’காந்தாக கருதி ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அரசியலும் அவரது வீட்டை சுற்றி சுற்றியே இருக்கிறது. அவரோ வந்தவங்களுக்கு நாலு...

Close