யுகபாரதிதான் வேணும்! -எழில் அவர் வேணாமே! -இமான் -விழி பிதுங்கிய வெள்ளைக்கார துரை
இமானுக்கும் யுகபாரதிக்கும் கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கு! இனி தன் படங்களில் யுகபாரதி இல்லை என்கிற அளவுக்கு இமான் நினைத்தாராம். இருவருக்கும் நடுவில் ஏதோ மனசை ஹர்ட் பண்ணுகிற விஷயம் நடந்திருப்பதாக ஊர் கூடி உப்புமா கிண்டிக் கொண்டிருக்கையில், துருவங்களை இணைத்தே தீர்வது என்று முடிவெடுத்து அதில் முன்னேறியும் விட்டார் டைரக்டர் எழில். பின்னே சும்மாவா? மனம் கொத்தி பறவை படத்திற்காக போட்ட பாடல்தான் ‘ஊதாக்கலரு ரிப்பன்….’ கடைசி நேரத்தில் அது வேலைக்காவது என்று முடிவெடுத்த எழில், அந்த ட்யூனை எடுத்து அப்படியே ஓரமாக வைத்துவிட்டார்.
பிற்பாடு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் தாறுமாறான கலெக்ஷனுக்கே அந்த ஒரு பாடல்தான் காரணமாக இருந்தது. இமானுக்கும் யுகபாரதிக்கும் நடுவில் அப்படியொரு மேஜிக் இருப்பதை அதற்கப்புறம்தான் உணர்ந்து கொண்டார் எழிலும்.
இந்த நேரத்தில்தான் எழில் இயக்கும் ‘வெள்ளைக்கார துரை’ படத்தில் இசையமைக்க இமானை அழைத்தார். அவரும் மகிழ்வோடு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு கண்டிஷன். எல்லா பாடல்களையும் யுகபாரதிதான் எழுதணும் என்று எழில் விரும்ப, லேசாக மனம் கோணினாராம் இமான். இருந்தாலும் எழிலுக்காக கொஞ்சம் சமாதானம் ஆனவர், வைரமுத்துவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டார்.
தனியா பாட்டு எழுதுறது சந்தோஷம். இன்னொருவரும் உள்ளே வந்தால் எரிச்சல். இதில் யுகபாரதிக்கும் எரிச்சல். வைரமுத்துவுக்கும் எரிச்சல். இமானின் ட்யூன்தான் மக்களையும் அவர்களையும் குளிர்விக்கணும்!