தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜய் மன்றம் போன்! அம்மா பயம் போச்?

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான்.

அவருதான் பைரவா ஷுட்டிங்ல இருக்காரே… அதைவிட வேறென்ன பண்ணப் போறார்? இப்படிதானே பதில் வரும்? ஆனால் கோடம்பாக்கத்தின் குறுகுறு கவனிப்புக்கு பின் வரும் பதில், அது இல்லீங் மக்கா!

சென்னையில் ஆக்டிவாக இருக்கும் அவரது மன்றப் பொறுப்பாளர் ஒருவரும், விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ ஒருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆக்டிவாக இருந்து தற்போது அதிருப்தியாக இருக்கும் சில தேமுதிக நிர்வாகிகளுக்கு போன் அடிக்கிறார்களாம். “நம்ம இயக்கத்துக்கு வந்திருங்க. உங்களுக்கு பிரைட்டான எதிர்காலத்தை ஏற்படுத்தி தர்றோம்” என்கிறதாம் இந்த போன் உரையாடல்.

இதையெல்லாம் விஜய் செய்யச் சொன்னாரா? அல்லது இவர்களாகவே ஆர்வ மிகுதியால் இப்படி செய்கிறார்களா தெரியாது. ஆனால் இவர்கள் அடித்த பந்து சரியாக கோல் போட்டிருக்கிறதாம். சிலர், நாங்க ரெடி…எப்போ எப்போ என்று கேட்டு வருவதாகவும் தகவல்.

ஒரு காலத்தில் விஜய்யை கிராமம் வரைக்கும் அழைத்துச் சென்றவரே விஜயகாந்த்தான். அவரது கட்சியிலேயே ஓட்டை போடுகிற வேலை நடக்கிறதே… அது தர்மமா? நியாயமா? என்ற கேள்விகள் எழும் முன் சுதாரித்துக் கொள்வது விஜய் நற்பெயருக்கு நல்லது.

ஆமாம்… அம்மாங்கிற பயம் போச்சா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நான் ஒரு காலத்திலேயும் சூப்பர் ஸ்டார் ஆக மாட்டேன்! சத்தியம் பண்ணும் சிம்பு?

ஊர் வாயை மூடணும்னா உலக்கையை விட்டு குத்தினாலும் நடக்காது. இந்த உண்மை புரியாமல் அடிக்கடி டென்ஷன் ஆகும் சிம்பு, தீபாவளி ஸ்பெஷலாக பேசியிருக்கும் ஒரு விஷயம்.... இன்டர்நேஷனல்...

Close