நல்லவேளை… விஜய்யை காப்பாற்றினார் சிம்பு!

மேரி பிஸ்கட்டை கொடுத்துவிட்டு மேரியையே வளைக்கிற ஊரல்லவா இது? இந்த பொல்லாத ஊரில் மனமுவந்து, “நான் இருக்கேன். டோன்ட் வொர்ரி” என்று சொன்னதைதான் விடாப்பிடியாக பிடித்து கொண்டு அன்பொழுகினார் சிம்பு. தனது ரெகுலர் விநியோகஸ்தர்களை விட்டு சிம்புவின் பைனான்சியரிடம் பேசச் சொன்ன விஜய், “ஒருவேளை வாலு ஓடலேன்னா அந்த நஷ்டத்தை நான் பார்த்துக்குறேன்னு சொல்லுங்க” என்றாராம். சிம்புவுக்கு விஜய் செய்த பேருதவி இதுதான்.

நடுவில் பேசிய விஜய் தரப்பு இந்த பேச்சை அப்படியே வாலு படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட பைனான்சியர்களிடம் சொல்ல, வழிவிட்டு ஒதுங்கினார்கள் அவர்களும். வாலு இதுதான் நடந்தது. சினிமாவில் சும்மா கொடுக்கிற வாக்குறுதிக்கே வாலை பிடித்துக்கொண்டு தொங்குவார்கள். கடைசியில் ‘தர்றீயா, இல்லையா?’ என்று மிரட்டுவார்கள். அவ்ளோ பெரிய ஸ்டார் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதற்காக காத்திருக்க மாட்டார்களா? காத்திருந்தார்கள். அவர்களின் அவ நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது வாலு.

இன்று வாலு உலகமெங்கும் ரிலீஸ். ஆச்சர்யம் என்னவென்றால், படு பயங்கரமான ஓப்பனிங். அஜீத், விஜய் படங்களுக்கு வருகிற ஓப்பனிங் சிம்பு படத்திற்கும் வர, திக்குமுக்காடிப் போய்விட்டது திரையுலகம். படம் எப்படி? தமிழகம் முழுக்க, படம் நல்லாயிருக்கு. என்று ஓவரால் ரிப்போர்ட் வர, இன்னும் இன்னும் சந்தோஷத்தில் குதித்து வருகிறார் சிம்பு.

சிம்புவை விட, “படம் ஓடலேன்னா நஷ்டத்தை நான் தர்றேன்ப்பா” என்று வாக்குறுதி கொடுத்த விஜய்க்குதான் அதிக சந்தோஷமாம்.

சங்கடம் விட்டுச்சே என்பதாலா? சந்தோஷம் கிட்டுச்சே என்பதாலா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க- விமர்சனம்

உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள். கதையே இல்லாத அல்லது நூலளவு கதையை...

Close