யுவன் திருமணம்! மீண்டும் ஒரு சிக்கல்? ஒத்துழைப்பு தர மறுக்கும் ஜமாத்?

இனிமேல் அப்துல்ஹாலிக் என்று எழுதினால் கூட, அது இசையமைப்பாளர் யுவன்தான் என்கிற அளவுக்கு அவரது மத மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள் ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன் கீழக்கரையில் தனது திருமணத்தை நடத்தி முடித்திருந்தார் அப்துல் ஹாலிக். ஆனால் இந்த திருமணத்தில்தான் இப்போது சிக்கலாம். அட… அதுக்குள்ள என்னய்யா?

இஸ்லாமிய திருமணத்திற்கு ஏகப்பட்ட சட்டதிட்டங்கள் இருக்கிறது. இந்த ஏரியாவை சேர்ந்தவர்கள் இந்த ஜமாத்திற்குதான் கட்டுப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கிறதாம். அதன்படி கீழக்கரை மேலத்தெரு உஷ்வதுன் ஹஷானா முஸ்லீம் சங்கம்தான் யுவனின் திருமணத்திற்கு சான்று தர வேண்டும். ஆனால் இந்த திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஒப்புதல் தரப்படவில்லை என்கிறார்கள். அதனால்தான் முதலில் துபாயில் நடப்பதாக இருந்த திருமணம் அங்கு நடக்காமல் அதற்கப்புறம் மலேசியாவில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டதாம். அங்கும் இதே போன்றதொரு சிக்கல் வந்ததை அடுத்து பாண்டிச்சேரிக்கு இடம் பெயராலாமா என்று யோசித்தார்களாம்.

அதற்கப்புறம்தான் அவசரம் அவசரமாக கீழக்கரையில் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். அங்கும் ஏதோ சிக்கல். அதற்கப்புறம் கீழக்கரையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்திருக்கும் செங்கழுநீரோடையில் நடந்திருக்கிறது. இந்த திருமணம் நடைபெறும் போது நிக்காஹ் ஏட்டில் மணமகன் கையெழுத்திட வேண்டுமாம். அதையும் யுவன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு சான்றளிக்க வேண்டிய கீழக்கரை மேலத்தெரு உஷ்வதுன் ஹஷானா முஸ்லீம் சங்கத்தை அழைக்கவே இல்லையாம் யுவனின் மாமனார் தரப்பில். அதனால் ‘அவர்கள் கேட்டால் கூட இந்த திருமணம் நடந்ததாக நாங்கள் சான்றிதழ் தரப்போவதில்லை’ என்கிறார்களாம் இவர்கள்.

இரு மணம் இணைந்தபின் மற்றதெல்லாம் எதற்கு என்று நினைத்துவிட்டார்கள் போலும்!

Read previous post:
விஜய்சேதுபதியுடன் சந்திப்பு! ஆபிசுக்கு திரும்பிய மிஷ்கின் ஒரே காச்மூச்?

பிசாசு படத்தின் தொடர் வசூல், மிஷ்கின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களுக்கு பிறகு அவரது படங்கள் வசூலில் நலிவுற்ற காரணத்தால், மிஷ்கின்...

Close