உங்க பிரச்சனைதான் என்ன? சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்?

சிங்காரவேலன் கதையை மீண்டும் ரஜினியின் லிங்காவிலிருந்து ஆரம்பிக்க தேவையில்லை. லேட்டஸ்ட் நிலவரம் என்ன? அதுதான் இது. இதை கேள்விப்படுகிற யாரும் இதில் உண்மையிருக்குமா? என்று சந்தேகப்படுவது இயற்கைதான். ஆனால்? கோடம்பாக்கத்தில் சுட சுட நிலவும் தகவல் இதுதான்.

இந்த விவகாரம் துவங்கி, பிச்சை போராட்டம் அறிவிக்கப்படும் வரை ரஜினி தரப்பிலிருந்து யாரும் சிங்காரவேலன் கோஷ்டியை சந்திக்கவோ, தனது சார்பில் பேச்சு வார்த்தை நடத்தவோ முன்வரவில்லை. பிரச்சனை முற்றியதும் பெங்களூர் நம்பரிலிருந்து ஒரு போன் வந்ததாம். எடுத்தால், நான் சந்திரஹாசன் பேசுறேன். ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவோட மருமகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாம். அன்றிலிருந்து இன்று வரை அந்த போன் கால் வந்து கொண்டேயிருப்பதும், சிங்காரவேலன் தொடர்பில் இருப்பதும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஷயம்.

கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவே சிங்காரவேலனை தொடர்பு கொண்டு, ‘லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் என்னதான் நடக்குது? நான் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்’ என்று கேட்டதாக தகவல். அதுமட்டுமல்ல, ‘ரஜினி கால்ஷீட் கிடைத்தால் உங்களில் யாராவது ஒருவர் வெளியாட்கள் யாரிடமும் பைனான்ஸ் வாங்காமல் படம் பண்ணுவீர்களா?’ என்றும் விசாரித்தாராம். ‘கடன் வாங்காமல் அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது கடினம்’ என்று இவர் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் சத்யநாராயணா-சிங்காரவேலன் சந்திப்பு நிகழ்ந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். யார் தலையையும் உருட்டாமல் சொந்த பிரச்சனையை தீர்த்துக் கொண்டு திரும்பினால் நல்லது!

Read previous post:
போட்ட ரெட் போட்டதுதான்! தயாரிப்பாளர் சங்கம் உறுதி!

ஒரு முக்கியமான சேனலுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிணக்கு, கணக்கு வழக்கில்லாமல் நீளும் போலிருக்கிறது. சேனலும் சும்மாயில்லை. ‘எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்க நீங்கள்...

Close