எனக்கு ஜோடியா நடிக்காதீங்கன்னு நடிகைகளை தடுத்தாங்க… ஹீரோக்களை போட்டு தாக்கும் வடிவேலு!

சுமார் இரண்டரையாண்டு கால வன வாசத்தை முடித்துவிட்டு இன்று பிரஸ்சை மீட் பண்ணினார் வடிவேலு. அதே கலகலப்பு… அதே சுறுசுறுப்பு… வடிவேலு வாயை திறந்தாலே அந்த ஏரியா அந்தல சிந்தலயாவது இயற்கைதானே? இன்றும் அப்படிதான். ‘நான் என்னை சொன்னேன்’ எபெக்ட்டிலேயே இருந்தது அவரது பேச்சு.

மைக்கை பிடித்தவர் எடுத்த எடுப்பிலேயே, ‘தேவையாடா ஒனக்கு இதெல்லாம்னுதானே பார்க்குறீங்க?’ ஆனால் நானா விரும்பி செஞ்சதில்ல அது என்று தனது தேர்தல் பிரச்சார அனுபவத்தை பற்றி நறுக்கென்று கூறிவிட்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தார். என்னை தேடி நிறைய படம் வந்துச்சு. நான்தான் இனிமே வந்தா ஒரு கிங் மாதிரி வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன். இந்த படம் வந்து அமைஞ்சுச்சு. யுவராஜ் எங்கிட்ட கதைய சொல்லி, புடிச்சிருந்தா சொல்லுங்கன்னாரு. அப்புறம் நான் இந்த படத்தை தயாரிக்கிறேன்னு கல்பாத்தி அகோரம் சார் வந்தாரு. அதுக்குள்ள வடிவேலுவை வச்சு பண்ணாதீங்கன்னு அவரு வீட்ல போய் அழுது புரண்டாய்ங்க ரொம்ப பேரு. அவருதான், ‘என்னய்யா தப்பு பண்ணிட்டாரு அவரு? எல்லாரும் பண்ணாததையா அவரு பண்ணினாரு? போங்கய்யான்னு சொல்லிட்டு இந்த படத்தை ஆரம்பிச்சார். அவரை நான் கையெடுத்து கும்புடுறேன்.

அங்க மட்டும் போயி நான் என்னத்தை பண்ணினேன்? சினிமாவுல என்ன பண்ணினேனோ, அததானே அங்க போய் பண்ணினேன்? இப்ப ரொம்ப பேரு அதைதான் பண்ணிகிட்டு இருங்காங்க என்று யாருடைய பிரச்சாரத்தையோ நக்கலடித்த வடிவேலு, அதே ஸ்பீடில் தொடர்ந்தார் தனது மிச்ச சொச்ச சொற்பொழிவையும்.

எந்த ஹீரோயினை பேசி டிக்கெட் புக் பண்ணி சென்னைக்கு வரவழைச்சாலும், ஐயய்யோ… வடிவேலு கூடவா நடிக்கிறீங்கன்னு ஆட்டத்தை கலைச்சு வந்த புள்ளைகளுக்கு அவய்ங்க ரிட்டர்ன் டிக்கெட் போட ஆரம்பிச்சிட்டாங்க. யாரு நடிக்க வந்தாலும் இவிய்ங்க மெசேஜ் அனுப்பிருவாய்ங்க. நீ வடிவேலு கூட நடிச்சா வேற எந்த ஹீரோவும் உன்னோட நடிக்க மாட்டோம்னு. இப்படியே ரெண்டு மூணு புள்ளங்க போயிருச்சு. அப்புறம் எப்படியோ இந்த மீனாட்சி தீக்ஷித்த கொண்டாந்தாங்க. இது எதுக்கும் கவலைப்படல. அட போங்கப்பான்னுட்டு. பாருங்க… எப்படியிருக்குன்னு. நான் அது கூட நடிக்கும்போது தக்காளி பழத்துல தார் ஊத்துன மாதிரி இருக்கு. என்னைய இந்த கோலத்துல இப்பதான் பார்க்குது. நான் எப்படியிருப்பேன்னே அதுக்கு தெரியாது. எப்பவும் ராசா வேஷத்துலேயேதான் என்னை பார்த்திருக்கும். இங்கன வந்ததுமே, ஏம்மா…என்னை அடையாளம் தெரியுதா? நான்தான் வடிவேலுன்னு சொன்னேன் என்று காட்டு காட்டென காட்டினார்.

இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் யாரும் அரசியல் பற்றி கேள்வி கேட்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் அவரே மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் பற்றியெல்லாம் பேசுவார் என்று அவர் சார்பில் மேடையில் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 18 ந் தேதி தெனாலிராமன் ரிலீசை வச்சுகிட்டு அரசியல் பேசுவாரு வடிவேலு? ம்க்கூம்… ஆசைதான் எல்லாருக்கும்…

If you act with Vadivelu no hero would act with you said few heroes from industry – Vadivelu

Vadivelu and his unit members of Tenaliraman organised the pre-release press meet when Vadivelu was at his best as always.

While he did not elaborate his misdemeanours during his previous elections, he confessed that he did not make that mistake intentionally. Speaking about Tenaliraman, he said that though there were offers coming his way, he did not accept hoping that he should make his comeback film in grand style.

“Tenaliraman came by my way. Director Yuvaraj narrated me the story and asked me if I liked it to call him back. Producer Kalpathi Agoram met me and confirmed that he would be producing the film. However there were several people who advised him not to produce film with Vadivelu. He ignored their advice and produced the film for which I convey my sincere thanks”, explained Vadivelu on the problems faced by the producer.

He also stated that they had chosen 3 actresses before the current actress Meenakshi. But they were driven away by some so called heroes telling that if they act with Vadivelu, no hero would act with them in future. “However Meenakshi Dikshit agreed to play the lead ignoring the weird threats of these people” said Vadivelu.

A formal request was made before the beginning of the press meet not to ask political questions and Vadivelu would convene another press meet to take on political questions, it was said.

Well! When the film is due for release on 18th April, there is no harm in Vadivelu taking extra precautions, is it not?  

 

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அதான் கைக்கு வந்தாச்சே… இனி ‘பத்மபூஷண் கமல்’ என்றே அழைக்கலாம்!

இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் சமயத்தில் கவலை ஏற்படுத்திய கமல், தனது சொல்லை அப்படியே வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த இனிய மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம், அவருக்கு...

Close